சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிலத்தை கொடுக்க மாட்டோம்.. சென்னை மெட்ரோவிற்கு மைலாப்பூரில் கடும் எதிர்ப்பு.. பரபரப்பு!

சென்னையில் மைலாப்பூர் பகுதியில் புதிய மெட்ரோ வழித்தடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மைலாப்பூர்வாசிகள் மத்திய அரசுக்கு மனு அளிக்க முடிவு எடுத்து இருக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மெட்ரோவிற்காக நிலத்தை கொடுக்க மைலாப்பூர் வாசிகள் எதிர்ப்பு

    சென்னை: சென்னையில் மைலாப்பூர் பகுதியில் புதிய மெட்ரோ வழித்தடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மைலாப்பூர்வாசிகள் மத்திய அரசுக்கு மனு அளிக்க முடிவு எடுத்து இருக்கிறார்கள்.

    சென்னை மெட்ரோவின் முதற்கட்ட திட்டப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டது. சென்னை மெட்ரோ ரயில் திட்ட முதல்கட்டத்தில் 45.01 கி.மீ தூரமுள்ள வழித்தட பணி நிறைவு செய்யப்பட்டுள்ளது.

    2 வழித்தடங்கள் பிப்ரவரி முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது. இந்த நிலையில் புதிய மெட்ரோ வழித்தடம் ஒன்றுக்கு சென்னையில் பெரிய எதிர்ப்பு எழுந்து இருக்கிறது.

     மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஆண்டுக்கு ரூ.2 லட்சம்.. சந்திரபாபு நாயுடு கவர்ச்சி வாக்குறுதி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஆண்டுக்கு ரூ.2 லட்சம்.. சந்திரபாபு நாயுடு கவர்ச்சி வாக்குறுதி

    என்ன மெட்ரோ

    என்ன மெட்ரோ

    சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை முதலில் மெட்ரோ போடப்பட்டது. அதன்பின் சென்னை அண்ணாசாலை டிஎம்எஸ் முதல் விமான நிலையம் வரை மெட்ரோ சேவை இயக்கப்பட்டது. இது மொத்தம் 35 கிமீ ஆகும். மேலேயும், சாலைக்கு கீழேயும் இந்த மெட்ரோ அமைக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய திட்டம்

    புதிய திட்டம்

    சென்னை மெட்ரோ ரயில் திட்ட முதல்கட்டத்தில் 45.01 கி.மீ தூரமுள்ள வழித்தட பணி நிறைவு செய்யப்பட்டுள்ளது. மேலும் புதிய 2 வழித்தடங்கள் பிப்ரவரி முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. அதேபோல் பூந்தமல்லியில் இருந்து லைட் ஹவுஸ் வரை ஆழ்வார்பேட்டை, மந்தைவெளி, மைலாப்பூர் வழியாக புதிய வழித்தடம் அமைக்கப்பட இருக்கிறது.

    மக்கள் எதிர்ப்பு

    மக்கள் எதிர்ப்பு

    இதற்குத்தான் சென்னை மைலாப்பூர்வாசிகள் தற்போது எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். இந்த ரயில்தடம் டிடிகே சாலை வழியாக செல்கிறது. இது மக்கள் அதிகம் வசிக்கும் இடம் ஆகும். இந்த இடத்தில் மெட்ரோ கட்ட அரசு நிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தில் இருக்கிறது.

    மிக மோசம்

    மிக மோசம்

    இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். எங்களுக்கு மெட்ரோ வேண்டாம். சென்னையில் சாலை போக்குவரத்தே சரியாக இருக்கிறது. அதனால் எங்களுக்கு மெட்ரோ தேவையில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். விரைவில் இதை எதிர்த்து மத்திய அரசுக்கு கடிதம் அனுப்ப திட்டமிட்டு இருக்கிறார்கள்.

    English summary
    People in Mylapore opposes Chennai metro's new project plan in TTK road.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X