சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எங்கெங்கும் டப் டப்... பட்டாசு வெடி வெடிக்க.. கோலாகல தீபாவளி

தீபாவளி பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: தீபாவளி பண்டிகை இன்று முழு உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. சில இடங்களில் கோர்ட் தடையையும் மீறி பட்டாசு வெடிகளுடன் தீபாவளி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

நாடெங்கும் இன்று தீபாவளி மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக கடந்த 10 நாட்களுக்கு மேலாக பஸ் ஸ்டான்ட், ரயில்வே ஸ்டேஷன், துணிகடைகள், பட்டாசு கடைகள் என எல்லா இடங்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

[நல்லா வெடிங்க.. சந்தோஷமா வெடிங்க.. இந்த நாற்றையும் நடுங்க.. வித்தியாசமான பட்டாசுக் கடை!]

 உற்சாக கொண்டாட்டம்

உற்சாக கொண்டாட்டம்

எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகள் காணப்பட்டன. கடைவீதிகள், பஜார்கள், என குழந்தை குட்டிகளுடன் குடும்பத்தார் ஷாப்பிங் செய்ய ஆரம்பித்தார். இந்நிலையில், இன்று தீபாவளி என்பதால் அனைவரும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறார்கள்.

 சிறப்பு பூஜை

சிறப்பு பூஜை

பொதுமக்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா துறை பிரபலங்கள், உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டிருக்கிறார்கள். அதேபோல பொதுமக்களும் உறவினர்கள், நண்பர்களுக்கு வாழ்த்துக்களை பரிமாறி வருகிறார்கள்.

 தடபுடல் விருந்து

தடபுடல் விருந்து

லேட்டாக எழும் குழந்தைகள் கூட இன்று தீபாவளியை கொண்டாட காலையில் சீக்கிரமாக எழுந்து குளித்து புது டிரஸ் அணிந்து மகிழ்ச்சியுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். கோயில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் இந்த வருடம் தலைதீபாவளி கொண்டாடுபவர்கள் கூடுதல் சந்தோஷம், பூரிப்புடன் தடபுடல் விருந்துகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 பட்டாசு சத்தம்

பட்டாசு சத்தம்

பட்டாசு வெடிக்க கூடாது என்று நேரம் குறித்து கோர்ட் தடை உத்தரவு போட்டாலும், வெடி சத்தம் நேத்து முதலே கேட்க தொடங்கிவிட்டது. இதில் பலர் கோர்ட் உத்தரவை மதித்து செயல்பட்டும் வருகிறார்கள். ஆனால் பெரும்பாலான இடங்களில் பட்டாசு சத்தம் கேட்டு கொண்டேதான் இருக்கிறது.

English summary
People is celebrated Deepavali Across Tamilnadu with Fire crackers
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X