சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமித் ஷா யாரென்று இப்போது தெரிகிறதா? புகழ்ந்து தள்ளிய ரஜினிகாந்த்.. வியந்து பார்த்த முதல்வர்!

உள்துறை அமைச்சர் அமித் ஷா யாரென்று இப்போது எல்லோருக்கும் தெரிந்து இருக்கும் என்று நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: உள்துறை அமைச்சர் அமித் ஷா யாரென்று இப்போது எல்லோருக்கும் தெரிந்து இருக்கும் என்று நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார். காஷ்மீர் பிரச்சனை குறித்து பேசும் போது ரஜினிகாந்த் இப்படி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. அதேபோல் ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரிப்பதாகவும் மத்திய அரசு அறிவித்தது.

இதை குறித்து இத்தனை நாட்கள் நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவிக்காமல் இருந்தார். இந்த நிலையில் இன்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய "கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல்" புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசினார். அதில் காஷ்மீரை பிரித்ததற்கு வாழ்த்துகள் என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டார்.

காஷ்மீரை இரண்டாக பிரித்தது சூப்பர் நடவடிக்கை.. அமித் ஷாவிற்கு ரஜினிகாந்த் பரபரப்பு வாழ்த்து! காஷ்மீரை இரண்டாக பிரித்தது சூப்பர் நடவடிக்கை.. அமித் ஷாவிற்கு ரஜினிகாந்த் பரபரப்பு வாழ்த்து!

ரஜினி

ரஜினி

இதில் ரஜினிகாந்த், அமித் ஷாவை தொடர்ந்து புகழ்ந்து பேசினார். ரஜினிகாந்த் தனது பேச்சில் சில முக்கியமான விஷயங்களை குறிப்பிட்டார். ரஜினிகாந்த் பேசியதாவது, அமித் ஷா காஷ்மீர் பிரச்சனையில் மிக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். அவருக்கு என்னுடைய சிறப்பான வாழ்த்துக்களை மனதார தெரிவித்துக் கொள்கிறேன்.

என்ன பேசினார்

என்ன பேசினார்

இப்போது அமித் ஷா யார் என்று மக்களுக்கு தெரிந்து இருக்கும். எல்லா மக்களுக்கும் அமித் ஷா யார் என்று இப்போது புரிந்து இருக்கும். இந்த நாட்டிற்காக நான் அவரிடம் நன்றி சொல்லிக்கிறேன். அவரின் மிக கடினமான உழைப்பு வென்றுவிட்டது.

என்ன மிஷன்

என்ன மிஷன்

உங்களின் மிஷன் வெற்றிபெற்றுவிட்டது. நீங்கள் போட்ட ஆபரேஷன் சரியாக செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. உங்களுக்கும் மேலும் வெற்றிகள் கிடைக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன், என்று நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

உள்துறை அமைச்சர்

உள்துறை அமைச்சர்

ரஜினிகாந்த் இப்படி புகழ்ந்து பேசும் போது, உள்துறை அமைச்சர் அமித் ஷா அதை ரசித்து பார்த்துக் கொண்டு இருந்தார். ரஜினியின் முகத்தையே பார்த்து சந்தோசத்தில் சிரித்துக் கொண்டு இருந்தார். அதேபோல் முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரும் இதை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டு இருந்தனர். காஷ்மீர் விவகாரத்தில் ரஜினி எடுத்து நிலைப்பாடு அமித் ஷாவிற்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

English summary
People might come to know Who is Amit Shah now says Rajini Kanth on Bifurcation of Jammu Kashmir.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X