சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஃபனி புயலால் சிதைந்த மாநிலங்கள்.. நீட் தேர்வை ஒத்திவைக்க மாணவர்கள் கோரிக்கை

Google Oneindia Tamil News

Recommended Video

    ஒடிசாவை புரட்டிப்போட்ட ஃபனி புயல் -வீடியோ

    சென்னை: ஃபனி புயல் காரணமாக ஆந்திரா, ஒடிசா மற்றும் தமிழகத்தில் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    வங்கக்கடலில் உருவான ஃபனி புயல் அதி தீவிரப்புயலாக வலுப்பெற்று ஒடிசாவின் புரி பகுதியில் இன்று கரையை கடந்தது.

    people requests to postponed NEET 2019 due to Cyclone Fani

    இந்த புயல் காரணமாக முன்னெச்சரிக்கையாக ஒடிசா மாநில கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 11 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த புயல் பூரியில் கரையை கடந்த போத மணிக்கு 175 கி.மீ என்ற வேகத்தில் சூறாவாளி காற்று வீசியது. இதனால் ஒடிசாவில் பல இடங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. மின்கம்பங்கள், சாலைகள் என அனைத்தும் சேதமாகியுள்ளது.

    ஒடிசாவில் ஃபனி புயலுக்கு நடுவே பிறந்த குழந்தைக்கு ஃபனி என பெயர்சூட்டிய மக்கள் ஒடிசாவில் ஃபனி புயலுக்கு நடுவே பிறந்த குழந்தைக்கு ஃபனி என பெயர்சூட்டிய மக்கள்

    அதே போல ஆந்திராவின் வடக்கு பகுதியும் பனி புயலால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தமிழகத்தின் வட மாவட்டங்களிலும் ஃபனி புயல் தாக்கம் இருந்தது.

    இதன் காரணமாக நாடு முழுவதும் நாளை மறுதினம் (மே 5ம் தேதி) நடைபெற உள்ள நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. புயலால் மக்கள் பல்வேறு இடங்களில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என மாணவ மாணவிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    English summary
    The cyclone Fani has made a landfall in Odisha on Friday morning. so people requests to postponed NEET 2019 due to Cyclone Fani
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X