சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரே நேரத்தில் சென்னை நோக்கி வந்த பல்லாயிரம் மக்கள்.. சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

Google Oneindia Tamil News

சென்னை: பொங்கல் பண்டிகை முடிந்து மீண்டும் பல்லாயிரம் பேர் சென்னைக்கு திரும்பியதால் விக்கிரவாண்டி, பரனூர், ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

Recommended Video

    காஞ்சிபுரம்: பொங்கல் முடிஞ்சாச்சு... சென்னை திரும்பும் மக்கள்.. சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்..!

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் சென்றார்கள். அவர்கள் அனைவரும் மீண்டும் சென்னையை நோக்கி கடந்த இரண்டு நாட்களாக அதிக அளவில் திரும்பி வந்தனர்.

    People returning to Chennai after Pongal festival: Heavy traffic congestion at tolls

    இதனால், திருச்சி சமயபுரம், உளுந்தூர் பேட்டை, ஆத்தூர், பரனூர் என சென்னை வரை உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் கடும் போக்குவரத்து நெரிசலை சந்தித்தன. ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான கார்கள் மற்றும் வேன்கள், இருசக்கர வாகனங்கள் சென்னையை நோக்கி படை எடுத்து வருவதால் மதுராந்தகத்தில் இருந்து, சென்னை வரை சுமார் 70 கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக காணப்பட்டது.

    குடியரசு தினத்தன்று டெல்லியில் ஒரு லட்சம் டிராக்டர் பேரணி நடக்குமா.. சுப்ரீம் கோர்டில் இன்று விசாரணைகுடியரசு தினத்தன்று டெல்லியில் ஒரு லட்சம் டிராக்டர் பேரணி நடக்குமா.. சுப்ரீம் கோர்டில் இன்று விசாரணை

    குறிப்பாக படாளம், புக்கத்துறை, மாமண்டூர் போன்ற பகுதிகளில் அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகளும், அப்பகுதி பொதுமக்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.. போக்குவரத்து நெரிசலை போலீசார் சீர் செய்த போதிலும் மணிக்கு பத்து கிலோமீட்டர் வேகத்திலேயே வாகனங்கள் செல்லும் அளவுக்கு நிலைமை இருந்தது.

    English summary
    Tens of thousands return to Chennai after Pongal festival, causing heavy traffic congestion at vickravandi, Paranur and Attur toll plazas.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X