சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக மக்கள் பரிசுபெட்டக சின்னத்தில் வாக்களித்து பெரிய புரட்சி செய்ய போகிறார்கள்- டிடிவி நம்பிக்கை

Google Oneindia Tamil News

Recommended Video

    வாக்களித்த பின்பு டிடிவி தினகரன் பேட்டி-வீடியோ

    சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். பல்வேறு பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களும் காலை முதலே தங்களத வாக்குகளை செலுத்தி வருகின்றனர். சென்னை அடையாறில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி ஒன்றில், அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி, தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்று வரும் தேர்தல்களில் மாபெரும் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.

    Peoples interest in regime change: TTV dinakaran interview

    மேலும் பேசிய அவர் தமிழக மக்கள் தலைநிமிர வேண்டும், தங்களது வாழ்வு செழிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் ஆட்சி மாற்றத்துக்காக ஆர்வத்துடன் வாக்களித்து வருவதாக தெரிவித்தார். ஏனெனில் தமிழ்நாட்டின் உரிமைகள் மோடி ஆட்சியில் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.

    'தலையெழுத்து' தேர்தலில் வாக்களித்த தலைவர்கள்.. 'ஆயுத எழுத்தாக' ஆர்வமுடன் செல்லும் மக்கள் 'தலையெழுத்து' தேர்தலில் வாக்களித்த தலைவர்கள்.. 'ஆயுத எழுத்தாக' ஆர்வமுடன் செல்லும் மக்கள்

    எடப்பாடி தலைமையில் நடைபெறும் ஆட்சியும், மோடியினுடைய ஆட்சி தான் என்பதால் மக்கள் கடுமையான வெறுப்பில் உள்ளதாக குறிப்பிட்டார். எனவே தமிழகம் புதிய மாற்றம் காண வேண்டும் என்பதற்காக தமிழக இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள், தாய்மார்கள் பரிசு பெட்டக சின்னத்தில் அமமுக-விற்கு வாக்களித்து பெரிய புரட்சியை ஏற்படுத்த போகிறார்கள் என்றார்.

    வாக்காளர்களுக்கு பணவிநியோகத்தில் ஈடுபட்டது முழுக்க முழுக்க அதிமுகவினர் தான் என்றார். வாக்குகளுக்காக நாங்கள் பணம் அளிக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது என வினவினார். மக்கள் எங்கள் பக்கம் இருப்பதால் எதிர்தரப்பினர் அச்சத்தில் ரூ2,000 வரை வாக்காளர்களுக்கு கொடுத்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

    English summary
    Dinakaran said that Tamil people are enthusiastically voting for regime change
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X