சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிவர் புயல் கடந்துவிட்டதாக அறிவிப்பு வரும் வரை மக்கள் வெளியே வர வேண்டாம்.. அமைச்சர் உதயகுமார்

Google Oneindia Tamil News

சென்னை: நிவர் புயல் கடந்துவிட்டது என வானிலை மையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை மக்கள் வெளியே வர வேண்டாம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்த நிலையில புயலாக இன்று காலை மாறியது. நிவர் புயல் மையம் சென்னைக்கு தென்கிழக்கே 450 கிமீ தொலைவில் இப்போது மையம் கொண்டுள்ளது.

People should not come out until the official announcement that Nivar storm is over: Minister Udayakumar

இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. நாளை புதுவை அருகே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போது 5 கிமீ வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. இந்த புயல் நாளை காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 120 கிமீ வேகத்தில் சூறவாளி வீசும் மிககனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்களை புயல் அபாயத்தில் இருந்து பாதுகாக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் அமைச்சர் ஆர்பி உதயகுமார், புயல் எச்சரிக்கை தொடர்பாக செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில், புயல் கரையை கடக்கும்போது மக்கள் வாகனங்களில் செல்லக்கூடாது.

Nivar: இது திருமண காலம்.. முதல்ல கொரோனா கெடுத்துச்சு.. இப்ப நிவர்.. அத்தை மகளை காண முடியலையே!Nivar: இது திருமண காலம்.. முதல்ல கொரோனா கெடுத்துச்சு.. இப்ப நிவர்.. அத்தை மகளை காண முடியலையே!

புயல் கடந்துவிட்டது என வானிலை மையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை மக்கள் வெளியே வர வேண்டாம். பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

Recommended Video

    8 மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யும் - வானிலை மையம் வார்னிங்

    புயல் குறித்து பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம்; அமைதியாக இருக்க வேண்டும். புயல் குறித்து யாரும் வதந்தி பரப்ப வேண்டாம். வதந்திகளை நம்ப வேண்டாம். அனைத்து நிவாரண முகாம்களிலும் மக்களுக்கு தடையின்றி உணவு தரப்படுகிறது. நீர்நிலைகளை 24 மணி நேரமும் கண்காணிக்க மாவட்ட ஆட்சிதலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம்" என்றார்.

    English summary
    Minister Udayakumar said that People should not come out until the official announcement that Nivar storm is over.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X