சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2 மாதங்களுக்குப் பின் ஞாயிறு லாக்டவுன் ரத்து- இறைச்சி கடைகளில் செம கூட்டம்- காணமல் போன சமூக இடைவெளி

Google Oneindia Tamil News

சென்னை: 2 மாதங்களுக்குப் பின்னர் ஞாயிற்றுக்கிழமை லாக்டவுன் ரத்து செய்யப்பட்டிருப்பதால் இறைச்சி கடைகளில் இன்று மக்கள் பெரும் கூட்டமாக குவிந்தனர். பொதுமக்கள் பெருந்திரளாக கூடி வருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Recommended Video

    லாக்டவுன் இல்லா ஞாயிற்று கிழமை.. காசிமேட்டில் களை கட்டிய மீன் வியாபாரம் - வீடியோ

    கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஞாயிறுதோறும் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாத முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இந்த ஞாயிறு முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது.

    People Throng Mutton Shops ahead Sunday Unlock

    இதனால் ஞாயிற்றுக்கிழமையன்று அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. இறைச்சி கடைகள் அனைத்தும் சனிக்கிழமை பின்னிரவு வரை திறக்கப்பட்டு விற்பனையாகி வந்தது. ஞாயிற்றுக்கிழமை தடையை மீறி கடையை திறந்தால் சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    தற்போது கொரோனா லாக்டவுன் கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்டுள்ளன. இதேபோல் 2 மாதங்களாக அமலில் இருந்த ஞாயிற்றுக்கிழமை லாக்டவுனும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலை முதலே இறைச்சி கடைகள் வழக்கமான பரபரப்புடன் காணப்பட்டன.

    People Throng Mutton Shops ahead Sunday Unlock

    சென்னையில் காசிமேடு மீன்சந்தை உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் பெரும் எண்ணிக்கையில் குவிந்தனர். சென்னை காசிமேட்டில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக கொரோனா பரவலை தடுக்க லாக்டவுன் போடப்பட்டிருந்ததாலும், ஞாயிற்றுகிழமைகளிலும் லாக்டவுன் இருந்ததாலும் மீன்சந்தை முழுவதுமாக மூடப்பட்டிருந்தது.

    People Throng Mutton Shops ahead Sunday Unlock

    இதனால் வழக்கமாக சந்தை போடும் பகுதியில் இல்லாமல் சாலை ஓரங்களில் வியாபாரிகள் மட்டும் மீன்வியாபாரம் செய்து வந்தனர். மேலும் ஞாயிற்றுகிழமை லாக்டவுன் என்பதால் சனிக்கிழமைகளிலே மீன் வாங்க பொதுமக்கள் அலைமோதிய நிலையே இருந்து வந்தது. இந்நிலையில் இந்த ஞாயிற்றுகிழமை லாக்டவுன் இல்லை என அரசு தளர்வுகள் அளித்த நிலையில் காசிமேட்டில் மீன்சந்தை 5 மாத இடைவெளிக்கு பின் திறக்கப்பட்டது.

    இந்தியாவில்தான் முதல் முறையாக ஒரேநாளில் 96,000 பேருக்கு கொரோனா- உலக அளவில் தொடரும் 3-வது இடம் இந்தியாவில்தான் முதல் முறையாக ஒரேநாளில் 96,000 பேருக்கு கொரோனா- உலக அளவில் தொடரும் 3-வது இடம்

    இதனால் மீன் வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் காசிமேடு மீன்சந்தைக்கு படையெடுத்தனர். கொரோனா பரவல் இருந்தபோதும் காசிமேடு மீன்சந்தையில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். ஆனால் சமூக இடைவெளி காற்றில் பறக்கவிடப்பட்டதுதான் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    People thronged the Kasimedu fish market and mutton shops on Sunday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X