சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்கூல் பிள்ளைகள் போல் வாட்டர் பாட்டில், டிபன், லஞ்ச் பாக்ஸுடன் வீட்டை விட்டு கிளம்பிய குடிமகன்கள்

Google Oneindia Tamil News

சென்னை: ஸ்கூல் பிள்ளைகள் போல் வாட்டர் பாட்டில், டிபன், லஞ்ச் பாக்ஸுடன் குடிமகன்கள் வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Recommended Video

    TASMAC Drinkers Dance, குடிமகன்களின் குத்தாட்டம்

    கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் அரசு மதுபான கடைகளை இன்று காலை 10 மணி முதல் திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்து இருந்தது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு தனிமை படுத்தப்பட்டு கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களைத் தவிர மாவட்டத்தில் 16 அரசு மதுபானக் கடைகளை திறக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.

    அன்பார்ந்த மக்களே! கோவை டாஸ்மாக் கடையில் முதல் 2 டோக்கன்களை 2 ஸ்பெயின் குடிமகன்கள் தட்டி சென்றனர்! அன்பார்ந்த மக்களே! கோவை டாஸ்மாக் கடையில் முதல் 2 டோக்கன்களை 2 ஸ்பெயின் குடிமகன்கள் தட்டி சென்றனர்!

    16 கடைகள்

    16 கடைகள்

    அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 16 கடைகளிலும் சமூக இடைவெளியுடன் மதுபான பிரியர்கள் மது பாட்டில்களை வாங்கிச் செல்ல தடுப்புகள் அமைக்கப்பட்டு நாற்காலிகள் போடப்பட்டு போலீசார் பாதுகாப்புடன் செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

    மதுபான கடை

    மதுபான கடை

    காலை 10 மணி முதல் அரசு மதுபான கடைகளில் விற்பனை துவங்க உள்ள நிலையில் ஒவ்வொரு கடையிலும் 25 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் விற்பனைக்காக இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மதுபானங்கள் வாங்க மூத்த குடிமகன்கள் கடை திறப்பதற்கு முன்னரே பல மணி நேரமாக மதுபான கடை முன்பாக காத்திருக்கின்றனர்.

    உள்ளூர் மக்கள்

    உள்ளூர் மக்கள்

    மேலும் மதுபானம் வாங்க வருபவர்கள் உள்ளூர் மக்களாகவும் அதற்குண்டான அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும் என அறிவித்துள்ள நிலையில் ஒவ்வொரு மதுபான பிரியர்களுக்கும் 4 மது பாட்டில்கள் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    காவல் துறை

    காவல் துறை

    உள்ளூர் மக்களை தவிர சென்னை ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த யாராவது மதுபானம் வாங்க வந்தால் அவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சில குடிமகன்கள் தண்ணீர் பாட்டில், காலை டிபன், மதியம் உணவு ஆகியவற்றுடன் காலை 6 மணிக்கே கடைகள் முன்பு ஆஜராகிவிட்டனர்.

    English summary
    Drunkards wait before the Tasmac shops opened with water bottles, Breakfast, Lunch etc.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X