சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெரும்பான்மையை உறுதி செய்துட்டீங்க.. நன்றி ஐயா, நன்றி.. ஓபிஎஸ்-இபிஎஸ் அசத்தல் அறிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தை ஆளும் தகுதி, அதிமுகவுக்கே உண்டு என்று மக்கள் தீர்ப்பு வழங்கி உள்ளனர் என்று, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தேனி தொகுதி தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி தோல்வியைத் தழுவியுள்ளது.

People wants aiadmk rule in Tamilnadu: OPS and EPS

அதேநேரம் 22 தொகுதிகளுக்கான, சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், 9 இடங்களில் அதிமுக முன்னிலை வகிக்கிறது. 13 இடங்களில் திமுக முன்னிலை வகிக்கிறது. ஆட்சியை காப்பாற்ற, குறைந்தபட்சம் ஐந்து எம்எல்ஏக்கள் போதுமானதாக இருந்த நிலையில், 9 தொகுதிகளில் அதிமுக முன்னிலையில் இருப்பது அந்த கட்சி தலைமையை குஷிப்படுத்தி உள்ளது.

எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த ஓபிஎஸ்.. நீங்க இதை கவனீச்சிங்களா? எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த ஓபிஎஸ்.. நீங்க இதை கவனீச்சிங்களா?

இதுபற்றி அதிமுக சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பேரவையில் அதிமுகவின் பெரும்பான்மையை உறுதி செய்த வாக்காளர்களுக்கு நன்றி. தமிழகத்தை ஆளும் தகுதி அதிமுகவிற்கு உண்டு என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, நல்லாட்சியை தொடர்ந்து வழங்குவோம். அதிமுக அரசு தொடரவும், அடிப்படை வாக்குவங்கியை நிலைநாட்டியதற்கும் தமிழக வாக்காளர்களுக்கு நன்றி.

வருத்தப்படப் போறீங்க தமிழக மக்களே.. தமிழிசை பரபரப்பு பேச்சு! வருத்தப்படப் போறீங்க தமிழக மக்களே.. தமிழிசை பரபரப்பு பேச்சு!

அதிமுகவினர் ஓரணியில் திரண்டு ஒற்றுமையாய் உழைக்க வேண்டிய நேரம் இது. தவறான வழிகாட்டுதலால் திசை மாறியவர்கள் ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினகரன் தரப்பால் இந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாத நிலையில், தவறான வழிகாட்டுதல்களால் திசைமாறியவர்கள் ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும் என அதிமுக தலைமை அழைப்புவிடுத்துள்ளது கவனிக்கத்தக்கது.

English summary
People wants aiadmk rule in Tamilnadu that is reflected in the by elections, says party chief O Panneerselvam and Edappadi palanichamy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X