சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தும்மல் வந்தாக்கூடவா.. கூகுளை குண்டக்க மண்டக்க கேள்விகளால் திணறடித்த மக்கள்

Google Oneindia Tamil News

சென்னை: வீட்டில் சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் என்பது நிச்சயம் மக்களுக்கு இப்போது புரிந்திருக்கும். இந்த ஊரடங்கில் வீட்டுக்குள் முடங்கி கிடந்த மக்களால் அதிகம் பாதிக்கப்பட்டது கூகுள் தான். என்னென்ன கேள்விகளை கேட்ட முடியமோ, அத்தனை கேள்விகளையும் கேட்டு திணறடித்திருக்கிறார்கள்.

தலைவலி வந்தால் கொரோனா வருமா, மது அருந்தினால் கொரோனா வருமா, புகைப்பிடித்தால் கொரோனா வருமா, தும்மல் கொரோனாவுக்கு அறிகுறியா என்று கேள்விக்கணைகளால் கூகுளை திணறடித்துவிட்டார்கள் மக்கள். ஆனால் அத்தனைக்கும் அசால்ட்டாக பதில் சொல்லி அசத்தியுள்ளது கூகுள்.

பொதுவாக நாம் கூகுளில் நமக்கு பிடித்த விஷயங்களை குறிப்பிட்டு தேடினால் எங்கிருந்தாலும் அதன் லிங்கை தேடி கொண்டுவந்துவிடும்.அத்துடன் சந்தேகங்கள் இருந்தால் கேள்விகளும் கேட்கலாம். அதற்கும் யாராவது நல்ல பதிலை எங்கேயாவது பதிவு செய்து வைத்திருந்தால் அதையும் காட்டும். இந்நிலையில் கூகுளே கொரோனா சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்திருக்கிறது. இந்த சேவையை கொரோனா ஊரடங்கில் மக்கள் எப்படி பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

தமிழகத்தைத் தொடர்ந்து.. புதுச்சேரியில் நாளை முதல் மதுக் கடைகள் ஓபன்.. குடிகாரர்கள் செம குஷி!தமிழகத்தைத் தொடர்ந்து.. புதுச்சேரியில் நாளை முதல் மதுக் கடைகள் ஓபன்.. குடிகாரர்கள் செம குஷி!

மருந்து கண்டுபிடிப்பா

மருந்து கண்டுபிடிப்பா

கடந்த 8ம் தேதி வரை உள்ள தேடல்களை அடிப்படையாக கொண்டு சில புள்ளி விவரங்களை கூகுள் வெளியிட்டிருக்கிறது. அதை இப்போது பார்ப்போம். அதில் அதிகம் பேர்
கொரோனாவுக்கு தடுப்பூசி வந்து விட்டதா? எப்போது கண்டுபிடிப்பார்கள் என்றே கேட்டிருக்கிறார்கள். இன்றைக்கு கொரோனா செய்திகள் என்னென்ன் என்றும் கேட்டிருக்கிறார்கள். ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தின் பயன்கள் , விலை என்ன? அதை எப்படி பயன்படுத்துவது என்று கேட்டிருக்கிறார்கள்.

தும்மல் வந்தால்

தும்மல் வந்தால்

தலைவலி வந்தால் கொரோனா அறிகுறியா? தும்மல் வந்தால் கொரோனா அறிகுறியா? என்று தாறுமாறாக கேட்டுள்ளார்கள். தடுப்பு மருந்து பற்றி அதிகபட்சமாக 38.6 சதவீத தேடி உள்ளார்கள்.. இதுபோல் ஹைட்ரோகுளோரோகுயின் தொடர்பாக 9.3% சதவீதம் பேரும், வெண்டிலேட்டர் தொடர்பாக 5.3% பேரும், ரத்த பிளாஸ்மா சிகிச்சை தொடர்பாக (3%) பேரும் தேடியுள்ளார்கள். மேலும் கொரோவை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்றும் பலரும் கேட்டிருக்கிறார்கள். .

கொரோனாவால் கேன்சர் வருமா

கொரோனாவால் கேன்சர் வருமா

மாஸ்க் தயாரிப்பது, மாஸ்க் அணிவது போன்ற தேடல்கள் 30.2 சதவீதமாக இருந்திருக்கிறது., சானிடைசர் பயன்கள், தயாரிப்பது எப்படி (7.3%), கை கழுவுதல், (1.9%), சமூக இடைவெளி (1.5%) ஆகியவை தொடர்பாக கேட்டுள்ளார்கள். கொரோனா வைரஸ் கேன்சர் தொடர்பு பற்றியும் (17.7%), கொரோனா வைரஸ் ஆஸ்துமா (17.2%), கொரோனா வைரஸ் நீரிழிவு (11.7%), புகைபிடித்தால் கொரோனா வருமா என (7.1%), உடல் பருமன் ஏற்படுமா என (2.4%) என தேடல்கள் உள்ளன.

Recommended Video

    A man in Tamil Nadu has filed a complaint against Google Map
     ஹைட்ராக்ஸி குளோரோகுயின்

    ஹைட்ராக்ஸி குளோரோகுயின்

    இந்தியாவில் உலக அளவில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பற்றி அதிகம் பேர் தேடியிருக்கிறார்கள். அமெரிக்காவிலும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பற்றி தேடி யுள்ளனர். ரத்த பிளாஸ்மா பற்றி அமெரிக்காவிலும், தடுப்பு மருந்து பற்றி அர்ஜென்டினாவில், வெண்டிலேட்டர் நைஜீரியாவில் தேடியிருக்கிறார்கள்.. இந்தியாவில் ரத்த பிளாஸ்மா (57%), தடுப்பு மருந்து (40%), வெண்டிலேட்டர் (37%) தேடல்கள் உள்ளன

    English summary
    Most-asked questions on Google on Coronavirus, Is headache a symptom of the coronavirus disease?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X