சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மழைக்காலத்தில் மக்களிடம் நல்ல பெயர் எடுப்பது சிரமம்! மழைநீர் தேங்காத சென்னையை இனி காணலாம் -ஸ்டாலின்

மழை வெள்ளக் காலத்தில் மக்களிடத்தில் நல்ல பெயர் எடுப்பது மிக சிரமம் என முதல்வர் ஸ்டாலின் பேச்சு

Google Oneindia Tamil News

சென்னை: மழைநீர் தேங்காத சென்னையை மக்கள் இனி பார்ப்பார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி வளாகத்தில் நடைபெற்ற தூய்மைப் பணியாளர்களுக்கான பாராட்டு விழாவில் பேசிய அவர் இதனைக் கூறினார்.

மழை வெள்ளக் காலத்தில் மக்களிடத்தில் நல்ல பெயர் எடுப்பது மிக மிக சிரமம் என்றும் அதில் தனக்கு நிறைய அனுபவம் உண்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது;

கறைபடிந்து காட்சி தந்த வரலாற்றுச் சின்னம் மனோரா! – கலக்கல் சுற்றுலாத் தலமாக மாற்றிய ஸ்டாலின் கறைபடிந்து காட்சி தந்த வரலாற்றுச் சின்னம் மனோரா! – கலக்கல் சுற்றுலாத் தலமாக மாற்றிய ஸ்டாலின்

 மழை வெள்ளம்

மழை வெள்ளம்

2021-ஆம் ஆண்டு பருவமழையின்போது பெற்ற அனுபவத்தைக் கொண்டு, உடனடியாக நாம் எல்லா வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் குறுகிய காலத்தில் செய்து முடித்தோம். அதன் பயனை 2022-ஆம் ஆண்டு பருவமழையின்போது கண்கூடாகப் பார்த்தோம். இனிவரும் ஆண்டுகளில், மழைநீர் தேக்கம் இல்லாத பருவமழைக் காலங்களை சென்னை வாழ் மக்கள் நிச்சயமாக பார்க்க இருக்கிறார்கள். இந்த அரசு மேலும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்பதை மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

சமூக வலைத்தளங்களில்

சமூக வலைத்தளங்களில்

சமூக வலைத்தளங்களில் - இது கடந்த முறை இங்கு தண்ணீர் தேங்கி இருந்தது என்று அந்தப் படத்தையும் போட்டு, இந்த முறை அந்தப் பகுதியில் தேங்கவில்லை என்ற அந்தப் படத்தையும் போட்டு மக்களிடத்தில் எடுத்துக் காட்டினார்கள். பொதுமக்களும் அதை வாட்ஸ்ஆப்-ல் பகிர்ந்த அந்த செய்திகளையெல்லாம் நாம் தொடர்ந்து பார்த்தோம். நான் அந்த செய்திகளையெல்லாம் பார்த்தபோது, நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் இருந்தது. அந்த அளவிற்கு மக்கள் நம்மை மனதாரப் பாராட்டினார்கள். அதேபோல், ஊடகங்களும் பாராட்டின.

மக்களிடத்தில் நல்ல பெயர்

மக்களிடத்தில் நல்ல பெயர்

நேரில் பார்க்கக்கூடிய பொதுமக்களும் நம்மை சந்திக்கிற நேரத்தில் தங்களுடைய பாராட்டுக்களை எல்லாம் வெளிப்படையாக தெரிவித்தார்கள்.
மழை வெள்ளக் காலத்தில் மக்களிடத்தில் நல்ல பெயர் எடுப்பது மிகமிக சிரமம். அதில் எனக்கு நிறைய அனுபவம் உண்டு. காரணம், நானும் இந்த மாநகராட்சியின் மேயராக இருந்தவன், ஒரு முறையல்ல, இரண்டு முறை, கிட்டத்தட்ட ஏழாண்டு காலம் இருந்தவன். சென்னையில் இருக்கக்கூடிய ஒவ்வொரு வார்டும் எனக்குத் தெரியும், ஏன் ஒவ்வொரு தெருவும் எனக்குத் தெரியும்.

ரெயின்கோட் போட்டுக் கொண்டு

ரெயின்கோட் போட்டுக் கொண்டு

மழை நின்ற பிறகு மட்டுமல்ல, மழை பெய்துகொண்டு இருக்கும்போதே ரெயின்கோட் போட்டுக் கொண்டு, நம்முடைய கமிஷனரை, நம்முடைய அலுவலரை அழைத்துக்கொண்டு, அந்தப் பணிகளையெல்லாம் நேரடியாக பார்த்தவன் நான். இப்போதும் அப்படித்தான். எனக்கு முன்னால் அதிகாரிகளும் - அலுவலர்களும் - தூய்மைப் பணியாளர்களும் இருப்பார்கள். நான் மட்டுமல்ல, அவர்களும் மழையில் நனைந்தபடியே பணியாற்றியவர்கள் தான்.

ஒரு சம்பவம் நடந்தவுடன்

ஒரு சம்பவம் நடந்தவுடன்

இதுதான் மக்கள் பணி. சுருக்கமாக ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால், இதுதான் கலைஞருடைய பணி, கலைஞருடைய பாணி. ஒரு சம்பவம் நடந்தவுடனே, அந்த இடத்திற்குப் போய்விட வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களைச் சென்று பார்க்க வேண்டும், அவர்களுக்கு நாம் ஆறுதல் சொல்ல வேண்டும் என்று என் மனம் துடிக்கிறது என்றால், அதற்குக் காரணம் தலைவர் கலைஞர் ஊட்டிய அந்த உணர்வுதான். அப்படி மக்களோடு மக்களாக நின்று கடமையாற்றிய உங்கள் அனைவரையும் இந்த நேரத்தில் நான் மனதாரப் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.

சம்பளம் வருகிறது

சம்பளம் வருகிறது

அரசாங்கத்தில் வேலை பார்க்கிறோம் - சம்பளம் வருகிறது என்று இல்லாமல், மக்களுக்காக பணியாற்றுகிறோம் என்கிற அந்த சேவை மனப்பான்மை உள்ளத்தோடு இருக்கக்கூடிய நிலையில் நீங்கள் பணியாற்றிய காரணத்தில்தான் இந்தப் பாராட்டும், இந்தப் பெருமையும், இந்தப் புகழும் இன்றைக்கு இந்த அரசாங்கத்திற்கு, இந்த மாநகராட்சிக்கு, நமக்கெல்லாம் வந்து சேர்ந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக, தூய்மைப் பணியாளர்களின் பணி என்பது மிகமிக மகத்தான ஒன்று என்பதை நான் இங்கே பெருமையோடு குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.

தூய்மைப் பணியாளர்

தூய்மைப் பணியாளர்

துப்புரவுப் பணியாளர்கள் என்ற அந்த சொல்லையே மாற்றியது தலைவர் கலைஞர் அவர்கள்தான். தூய்மைப் பணியாளர் என்று மாற்றியது தலைவர் கலைஞர் அவர்கள்தான். அந்தப் பணியின் கடினமான தன்மையை ஏற்றுக்கொண்டிருக்கக்கூடிய நீங்கள் சிறப்பாக பணியாற்றியிருக்கிறீர்கள். அதனால்தான் இந்த முகமலர்ச்சியோடு நம்முடைய அரசாங்கத்தை மக்கள் பார்க்கிறார்கள்.

மழைநீர் தேங்காத சென்னை

மழைநீர் தேங்காத சென்னை

2021-ஆம் ஆண்டு பருவமழையின்போது பெற்ற அனுபவத்தைக் கொண்டு, உடனடியாக நாம் எல்லா வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் குறுகிய காலத்தில் செய்து முடித்தோம். அதன் பயனை 2022-ஆம் ஆண்டு பருவமழையின்போது கண்கூடாகப் பார்த்தோம். இனிவரும் ஆண்டுகளில், மழைநீர் தேக்கம் இல்லாத பருவமழைக் காலங்களை சென்னை வாழ் மக்கள் நிச்சயமாக பார்க்க இருக்கிறார்கள். இந்த அரசு மேலும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்பதை மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

English summary
Chief Minister Stalin has promised that people will see a rain water stagnation free in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X