• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
LIVE

உச்சநீதிமன்ற உத்தரவு- பேரறிவாளன் ஜாமீன் ரத்து செய்யப்பட்டு விடுதலை- தமிழக அரசு

Google Oneindia Tamil News

சென்னை; உச்சநீதிமன்ற ஆணைப்படி பேரறிவாளனின் ஜாமீன் பத்திரம் ரத்து செய்யப்பட்டு இன்று விடுதலை செய்யப்பட்டார் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று இருக்கும் பேரறிவாளன் தற்போது ஜாமீனில் இருக்கிறார். 2014ல் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.இவர்களின் கருணை மனு அப்போது நிலுவையில் இருந்தது. நீண்ட காலம் கருணை மனு நிலுவையில் இருப்பது அநீதிக்கு சமமானது. இதை சுட்டிக்காட்டி 2014ல் இவரின் தூக்கு தண்டனை ஆயுள் தன்னுடையாக குறைக்கப்பட்டது.

இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பேரறிவாளன் 2016ல் மனுதாக்கல் செய்து, அதன்பின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தார். கடந்த சில வாரங்களாக வழக்கில் விசாரணை நடந்து வந்த நிலையில் கடந்த 11ம் தேதி விசாரணை முடிந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், மற்றும் பிஆர் கவாய் ஆகியோர் இன்று பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினர்.

Perarivalan Case live updates: Supreme Court verdict today

Newest First Oldest First
10:22 PM, 18 May
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பேரறிவாளன் சந்திப்பு
10:05 PM, 18 May
உச்சநீதிமன்ற உத்தரவு- பேரறிவாளன் ஜாமீன் ரத்து செய்யப்பட்டு விடுதலை- தமிழக அரசு
6:02 PM, 18 May
Perarivalan father speech | Supreme Court orders release of A G Perarivalan, convict in Rajiv Gandhi case
5:59 PM, 18 May
பேரறிவாளன் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தீர்ப்பு முழு விவரம்:
5:50 PM, 18 May
Perarivalan தாய் Arputhammal தாய்மையின் இலக்கணமாக இருக்கிறார் - முதல்வர் Stalin பாராட்டு
5:50 PM, 18 May
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பேரறிவாளன் சந்திப்பு
5:50 PM, 18 May
சென்னையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பேரறிவாளன்சந்திப்பு
5:49 PM, 18 May
தமது விடுதலைக்காக அழுத்தமாக வாதிட்ட தமிழக அரசுக்கு முதல்வரிடம் நன்றி தெரிவித்தார் பேரறிவாளன்
5:49 PM, 18 May
சென்னை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் பேரறிவாளன்
5:49 PM, 18 May
பேரறிவாளனுடன் பெற்றோரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்
5:45 PM, 18 May
சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பேரறிவாளன் சந்திப்பு
4:12 PM, 18 May
சென்னையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை பேரறிவாளன், தாயார் அற்புதம்மாள் சந்திக்கின்றனர்
3:21 PM, 18 May
PerarivalanRelease | Coimbatore-ல் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் | Oneindia Tamil
3:20 PM, 18 May
மூன்று பேருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதற்கான நாள் குறித்து அறிவிப்பு வெளியானதைக் கேட்டு அதிர்ந்து போனேன். இந்தியாவின் தலைசிறந்த வழக்கு உரைஞர் ராம் ஜெத்மலானி அவர்களைத் தொடர்பு கொண்டு, சென்னைக்கு அழைத்து வந்து, உயர்நீதிமன்றத்தில் வாதாடச் செய்து, தண்டனையை நிறுத்தி வைத்துத் தடை ஆணை பெற்றோம். அதற்குப் பின்னர், உச்சநீதிமன்ற மேல் முறையீட்டின் அனைத்து அமர்வுகளிலும், ராம் ஜெத்மலானி அவர்கள் கலந்து கொண்டு அருமையான வாதங்களை எடுத்து வைத்தார். இந்த வழக்கில், அவருடைய வாதங்கள் முதன்மையானவை. அத்தனை அமர்வுகளிலும், அவருடன் நான் பங்கேற்றேன். அதன்பிறகு, தமிழ்நாடு அமைச்சர் அவை தீர்மானம் நிறைவேற்றி, விடுதலை செய்யும்படி பரிந்துரை செய்து பல ஆண்டுகள் கடந்தபோதிலும், முந்தைய ஆளுநரும், இன்றைய ஆளுநரும் அந்தக் கோப்பைக் கிடப்பில் போட்டு வைத்து இருந்தது மிகப்பெரிய அநீதி ஆகும். எந்தத் தவறும் செய்யாமல், இந்த இளைஞனுடைய இளமைக்கால வாழ்க்கை, சீர்குலைக்கப்பட்டு விட்டது. 31 ஆண்டுகளாக, இந்த ஏழு பேரும் துன்ப இருளில் வாடி வதங்கி விட்டார்கள். இழந்ததை இனி அவர்கள் மீண்டும் பெற முடியாது. இப்போது, உச்சநீதிமன்றம் நீதியை நிலைநாட்டி இருக்கின்றது; மகிழ்ச்சி. பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது போலவே, மற்ற ஆறு பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும்- வைகோ
2:49 PM, 18 May
பேரறிவாளன் விடுதலை: அதிமுகவின் சட்ட ஞானத்துக்கு கிடைத்த மகத்தான் வெற்றி-ஓபிஎஸ்-ஈபிஸ்
2:35 PM, 18 May
Perarivalan Release | Pazha Nedumaran Speech | Oneindia Tamil
2:35 PM, 18 May
பேரறிவாளன் விடுதலை மிகுந்த மன நிறைவை தருகிறது - சீமான்
2:34 PM, 18 May
பேரறிவாளனின் வருங்காலமாவது தாயின் அரவணைப்பில் வசந்தமாகட்டும் - சீமான்
2:34 PM, 18 May
மீதமுள்ள 6 பேரையும் விடுதலை செய்யும் சட்டப் போராட்டத்தைத் தொடங்க வேண்டும் - சீமான்
2:22 PM, 18 May
பேரறிவாளன் விடுதலைக்கு எதிராக தமிழகத்தில் நாளை காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டம்: கே.எஸ். அழகிரி அறிவிப்பு
1:26 PM, 18 May
PerarivalanRelease | கதறி அழும் பேரறிவாளன் உறவினர்கள் | Oneindia Tamil
1:24 PM, 18 May
அமெரிக்கை நாராயணன் சர்ச்சை கருத்து
1:24 PM, 18 May
"பேரறிவாளன் விடுதலை பணநாயகம், பயங்கரவாதத்துக்கு கிடைத்த வெற்றி"
1:24 PM, 18 May
காங்கிரஸ் பிரமுகர் அமெரிக்கை நாராயணன் சர்ச்சை கருத்து
1:14 PM, 18 May
தமிழ்நாட்டு அரசுக்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் வணக்கம் - வைரமுத்து
1:14 PM, 18 May
இரும்புக் கம்பிகள் இளமையைத் தின்று தீர்த்தபிறகு ஒரு மனிதன் வெளியே வருகிறான் - வைரமுத்து
1:14 PM, 18 May
பேரறிவாளனுக்குத் திறந்த அதே வாசல் வழியே சம்பந்தப்பட்ட ஏனையோரும் வெளிவர வேண்டும் - வைரமுத்து
1:11 PM, 18 May
Perarivalan விடுதலை.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
1:10 PM, 18 May
உச்சநீதிமன்றத் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை- காங்கிரஸ் கே எஸ் அழகிரி
1:10 PM, 18 May
அதே நேரத்தில் குற்றவாளிகள் கொலைக்காரர்கள் - கே எஸ் அழகிரி
READ MORE

English summary
Perarivalan Case live updates: Supreme Court verdict today. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று பேரறிவாளன் தொடுத்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X