சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பேரறிவாளனுக்கு பரோல் தாமதம் : கும்பகர்ணன் மாதிரி தூங்குறீங்களா? அரசைக் கேட்ட ஹைகோர்ட்

பேரறிவாளனுக்கு 90 நாள் பரோல் வழங்கக்கோரி அவரின் தாய் தொடர்ந்த வழக்கில் தகுந்த உத்தரவை பிறப்பிக்காத சிறை அதிகாரிகளுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: பேரறிவாளனுக்கு பரோல் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிபதிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். கும்பகர்ணன் மாதிரி தூங்கி கொண்டுள்ளீர்களா? என்று கேட்ட நீதிபதிகள்,அரசுக்கு வழக்கு செலவு அபராதமாக விதிக்கப்படும் என்று எச்சரித்ததோடு வெள்ளிக்கிழமைக்குள் அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள பேரறிவாளன் கடந்த 28 ஆண்டுகளாக சென்னை புழல் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.

Perarivalan Parole Case: Are you sleeping like Kumbakarna HC asks government

இந்நிலையில், தனது மகன் பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்க கோரி, அவரது தாய் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், புழல் சிறையில் உள்ள 50 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வரும் பேரறிவாளனுக்கு கொரோனா தொற்று பாதிக்கும் அபாயம் இருப்பதால், அவருக்கு 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இந்த மனு கடந்த முறை உயர் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தபோது அப்போது அரசு தரப்பில், கடந்த 2019 நவம்பர் மாதம் பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்கப்பட்ட நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு தான் மீண்டும் பரோல் வழங்க முடியும் என தெரிவித்தார்.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் தீர்மானம் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ஆளுநரிடம் நிலுவையில் உள்ளதாக தெரிவித்தார்.

ஒரு வாரமாக மோசம்.. தமிழகத்தில் ஒரே நாளில் 6426 கொரோனா கேஸ்கள்.. மொத்த பாதிப்பு 234114 ஆக உயர்வு!ஒரு வாரமாக மோசம்.. தமிழகத்தில் ஒரே நாளில் 6426 கொரோனா கேஸ்கள்.. மொத்த பாதிப்பு 234114 ஆக உயர்வு!

மேலும், இது போன்ற சந்தர்ப்பங்களில் பரோல் வழங்க 2 ஆண்டுகள் வரை காத்திருக்க தேவையில்லை என ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்ற முழு அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

அரசியலமைப்பு பதவியில் உள்ளவர்கள் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் தான் அவர்கள் முடிவெடுக்க வேண்டிய விவகாரங்களில் கால அவகாசங்கள் நிர்ணயிக்கப்படவில்லை என தெரிவித்து, 2 ஆண்டுகளுக்கு மேலாக இவர்களின் விடுதலை தொடர்பான தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பதற்கு அதிருப்தி சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது

மீண்டும் இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் மற்றும் நீதிபதி வேலுமணி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது
அப்போது நீதிபதிகள் இது போன்ற சூழலில் கூட தகுந்த உத்தரவை பிறப்பிக்காத சிறை அதிகாரிகள் மீது ஏன் 1 லட்சம் அபராதம் விதிக்கக் கூடாது பரோல் அளிப்பதும், நிராகரிப்பதும் உரிமை தான், ஆனால் முடிவெடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

கடந்த மார்ச் மாதம் மனு அளித்து,ஏப்ரல் மாதம் நினைவூட்டல் அளிக்கப்பட்டும் ஏன் ஜூலை வரை நடவடிக்கை இல்லை அரசு உரிய முறையில் செயல்படாததால் தான் நீதிமன்றத்தின் வழக்கு சுமை அதிகரிக்கிறது. இது மற்ற வழக்குகளை போன்ற வழக்கல்ல என்று தெரிவித்த நீதிபதிகள் ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை அவர்கள் இதே போன்று நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது, அரசு,சிறைத்துறை, அரசு உரிய நேரத்தில் கடமையாற்றினால் அவர்கள் நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியமில்லை,

கும்பகர்ணன் மாதிரி தூங்கி கொண்டுள்ளீர்களா? அவர்கள் ஏற்கனவே சிறையில் உள்ளனர்,தற்போது வழக்கறிஞருக்கு வேறு செலவு செய்ய வேண்டுமா,அரசுக்கு வழக்கு செலவு அபராதமாக விதிக்கப்படும் என்று எச்சரித்த நீதிபதிகள் வெள்ளிக்கிழமைக்குள் அரசு பதிலளிக்க உத்தரவு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

English summary
A case filed seeking parole for Perarivalan. Are you sleeping like Kumbakarna? The judges warned that the state would be fined for the cost of the case and ordered the state to respond by Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X