சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராஜீவ் கொலை வழக்கு: பேரறிவாளனுக்கு 30 நாட்கள் மட்டும் பரோல் - ஹைகோர்ட் உத்தரவு

ராஜிவ் கொலை வழக்கில் கைதான பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் மட்டும் பரோல் வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள பேரறிவாளன் கடந்த 29 ஆண்டுகளாக சென்னை புழல் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். மகன் பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்க கோரி, அவரது தாய் அற்புதம்மாள் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Perarivalan parole : High Court order to Tamil Nadu government

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வில் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, சிறைத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே கடந்த 2017 ஆம் ஆண்டு மற்றும் 2019 ஆம் ஆண்டு பேரறிவாளனுக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளதால், 2 ஆண்டுகளுக்குள் மீண்டும் விடுப்பு வழங்க முடியாது என மீண்டும் தெரிவித்திருந்தார்.

அற்புதம்மாளின் மனுவை கடந்த ஜூலை 29ம் தேதி சிறைத்துறை ஐ.ஜி நிராகரித்து விட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டது. இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், அற்புதம்மாளின் மனு குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கே முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதன்படி இந்த மனு மீது உரிய முடிவெடுக்காமல் அதனை சிறைத்துறைக்கு அனுப்பி வைத்தது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

வழக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது பேரறிவாளன் பரோல் மனுவை தமிழக அரசு நிராகரித்து விட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நிராகரிக்கப்பட்டது தொடர்பான உத்தரவை மனுதாரர் தரப்புக்கு வழங்குமாறு கூறிய நீதிபதிகள் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக தெரிவித்தனர்.

ரபேல் தொழில்நுட்பம்...சிஏஜி அறிக்கை...அரசுக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்...ப.சிதம்பரம் ட்வீட்!! ரபேல் தொழில்நுட்பம்...சிஏஜி அறிக்கை...அரசுக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்...ப.சிதம்பரம் ட்வீட்!!

இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர், பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். உத்தரவு கிடைத்த ஒரு வாரத்திற்குள் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து, 30 நாட்கள் விடுப்பு அளிக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

அவர் விடுப்பில் இருக்கும் காலங்களில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளுக்காக சிறைத்துறை விதிக்கும் நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

English summary
Perarivalan, who was arrested in the Rajiv Gandhi murder case and lodged in the Chennai Central Jail, had filed a petition in the Chennai High Court seeking his 90 day parole as he was suffering from poor health. The Chennai High Court has ordered the Tamil Nadu government to grant 30 days parole to Perarivalan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X