சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பேரறிவாளனுக்கு பரோலை நிராகரித்த சிறைத்துறை : தமிழக அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்

90 நாட்கள் பரோல் கேட்டு பேரறிவாளனின் தாயார் கொடுத்த மனு மீது முடிவெடுக்காமல் மனுவை சிறைத்துறைக்கு அனுப்பியது ஏன் என்பது குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்

Google Oneindia Tamil News

சென்னை: பேரறிவாளனுக்கு பரோல் கேட்டு தாக்கல் செய்த அற்புதம்மாளின் மனு குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கே முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதன்படி இந்த மனு மீது உரிய முடிவெடுக்காமல் அதனை சிறைத்துறைக்கு அனுப்பி வைத்தது ஏன்? என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக ஆகஸ்ட் 31ஆம் தேதி தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள பேரறிவாளன் கடந்த 29 ஆண்டுகளாக சென்னை புழல் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். மகன் பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்க கோரி, அவரது தாய் அற்புதம்மாள் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Perarivalan parole prison denies : High Court notice to TN government

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி, இந்த வழக்கில் தொடர்புடையவர்களுக்கு ஏற்கனவே விடுப்பு வழங்கியது தொடர்பான உத்தரவுகளை பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது, சிறைத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே கடந்த 2017 ஆம் ஆண்டு மற்றும் 2019 ஆம் ஆண்டு பேரறிவாளனுக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளதால், 2 ஆண்டுகளுக்குள் மீண்டும் விடுப்பு வழங்க முடியாது என மீண்டும் தெரிவித்தார்.

மேலும், பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் கேட்டு அற்புதம்மாள் தமிழக அரசிடம் மனு அளித்ததாகவும், அந்த மனு மீது உரிய முடிவெடுக்க சிறைத்துறை ஐ.ஜி'க்கு தமிழக அரசு அனுப்பி வைத்ததாகவும், பின்னர், அற்புதம்மாளின் மனுவை கடந்த ஜூலை 29ம் தேதி சிறைத்துறை ஐ.ஜி நிராகரித்து விட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

எல்லாமே சீக்ரெட்.. சோனியா, ராகுலின் எல்லாமே சீக்ரெட்.. சோனியா, ராகுலின் "ரேடாரில்" சிக்காத 23 தலைவர்கள்..திடீரென ஒன்று சேர்ந்தது எப்படி?

இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், அற்புதம்மாளின் மனு குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கே முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதன்படி இந்த மனு மீது உரிய முடிவெடுக்காமல் அதனை சிறைத்துறைக்கு அனுப்பி வைத்தது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இது தொடர்பாக விளக்கமளிக்க தமிழக அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதையடுத்து வழக்கு விசாரணை மீண்டும் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

English summary
The Government of Tamil Nadu has been given full power to decide on the petition filed by Arpudammal seeking parole for Perarivalan, why was it sent to the Prisons Department without taking a proper decision on this petition accordingly? As questioned by High Court judges. The court has ordered the Tamil Nadu government to explain in this regard on August 31.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X