சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முதியோருக்கு கொரோனா தடுப்பூசி...சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் பெரும் பின்னடைவு..!

Google Oneindia Tamil News

சென்னை: 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் விவகாரத்தில், சென்னையை தவிர தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் பெரும் பின்னடைவு காணப்படுகிறது..

Recommended Video

    முதியோர் தடுப்பூசி... முதலிடத்தில் தலைநகர்… பெரும் இடைவெளியில் மற்ற மாவட்டங்கள்!

    சென்னையின் மொத்த மக்கள் தொகை அடிப்படையில் 70.64 % முதியோர் இதுவரை கொரோனா தடுப்பூசி முதல் டோஸை போட்டுள்ளனர்.

    2 எம்.எல்.ஏக்கள்தான் ஆதரவு.. பெரும் சோகத்துடன் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தைவிட்டு வெளியேறிய ஓபிஎஸ் 2 எம்.எல்.ஏக்கள்தான் ஆதரவு.. பெரும் சோகத்துடன் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தைவிட்டு வெளியேறிய ஓபிஎஸ்

    இதனிடையே சென்னையுடன் மற்ற மாவட்டங்களை குறிப்பாக ஊரக பகுதிகள் நிறைந்த மாவட்டங்களை ஒப்பிடும் போது அங்கு களநிலவரம் மிக மோசமாகவும், கவலையளிக்கும் வகையிலும் இருக்கிறது.

     கொரோனா தடுப்பூசி

    கொரோனா தடுப்பூசி

    கொரோனா பரவலை தடுக்கும் வகையில் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டது. பிறகு அந்த நடைமுறையில் மாற்றம் செய்து 45 வயதாக குறைக்கப்பட்டு, இன்று 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் தமிழகத்திலேயே 60 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதில் சென்னை முதலிடத்தில் உள்ளது.

    மக்கள் தொகை

    மக்கள் தொகை

    இதற்கு அடுத்தப்படியாக அதிக மக்கள் தொகை மற்றும் பெருநகரங்கள் வரிசையில் கோவை இரண்டாம் இடத்தில் உள்ளது. அங்கு 26.2% முதியோர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுள்ளனர். இதனிடையே மக்கள் தொகை குறைவாக உள்ள நீலகிரி மாவட்டத்தில் 43.2% முதியோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. மேற்கண்ட இந்த மூன்று மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் முதியோர்களுக்கு செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசி விகிதங்களை ஆராய்ந்தால் முடிவு கவலையளிக்கும் வகையில் உள்ளது.

     பெரும் இடைவெளி

    பெரும் இடைவெளி

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 21% முதியோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக 10 -20 %-ற்குள் முதியோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதன் வரிசையில் திருவண்ணாமலை, நாமக்கல், கிருஷ்ணகிரி, மதுரை, விருதுநகர், திருச்சி, உள்ளிட்ட 21 மாவட்டங்கள் வருகின்றன. சென்னையை ஒப்பிட்டு பார்க்கும் போது முதியோருக்கு தடுப்பூசி போடும் விவகாரத்தில் இந்த மாவட்டங்களில் ஒரு பெரும் இடைவெளி இருக்கிறது.

    மிக மோசமான

    மிக மோசமான

    சரி இது தான் இப்படி இருக்கிறது என்றால் இதை விட மிக குறைந்த அளவில், அதாவது வெறும் 5-10% முதியோருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்ட மாவட்டங்களில் கரூர், அரியலூர், நாகை, திருவாரூர், திருநெல்வேலி, உள்ளிட்ட இடங்கள் இருக்கின்றன. மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் மிக மோசமான நிலையில் இருப்பதாக மே 7-ம் தேதி கிடைத்த ஆய்வு முடிகள் கூறுகின்றன.

    மே 7-ம் தேதி

    மே 7-ம் தேதி

    மேலும், மே 7-ம் தேதி மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, மாநிலத்துக்கு ஒதுக்கப்பட்ட மொத்த தடுப்பூசிகளில் 85% மட்டுமே (வீணடிப்பு உட்பட) தமிழகம் பயன்படுத்தியிருக்கிறது என்றும் தெரிய வந்துள்ளது. அதேவேளையில் ஒடிசா 96%, கேரளா 95%, மேற்கு வங்கம் 95% கொரோனா தடுப்பூசிகளை முழுமையாக பயன்படுத்தியிருப்பதும் தெரிய வருகிறது.

    அளவுமுறை

    அளவுமுறை

    இதனிடையே கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் அளவுமுறை இருப்பதால், அதிகம் கொரோனா பாதிக்கும் பகுதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து பயன்படுத்தப்படுவதாகவும் அந்த வகையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, கோவை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள முதியோருக்கு அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது எனவும் பெயர் வெளியிட விரும்பாத சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

    English summary
    percentage of the elderly who had received corona vaccine
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X