சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முருகன் போய் மயில் வேல் வந்தார்.. பெரியகுளம் அதிமுக வேட்பாளர் திடீர் மாற்றம்.. !

பெரியகுளம் தொகுதியில் மயில்வேல் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Periyakulam Candidate: அதிமுக பெரியகுளம் தொகுதி வேட்பாளர் மாற்றம்- வீடியோ

    சென்னை: பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் முருகன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதில் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் முருகனுக்கு பதில் மயில்வேல் போட்டியிடுவார் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊர் பெரியகுளம். தனி தொகுதியான பெரியகுளம் வேட்பாளராக முருகன் என்பவர் போட்டியிடுவார் என அதிமுக தலைமை அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு வெளியான சில மணி துளிகளிலேயே பெரியகுளம் புகைய ஆரம்பித்தது.

    காரணம் வேட்பாளர் முருகன் தேனி மாவட்டத்தை சேராதவர். MA., B.Ed., MSW படித்துவிட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பரிந்துரை செய்ததன்பேரில், இவருக்கு துணை முதல்வர் சீட் தந்ததாக சொல்லப்பட்டது. இதுதான் கடுமையான அதிருப்தியை கடந்த 2 நாட்களாக ஏற்படுத்தி விட்டது.

    இந்த 3 விஷயம்தான் எனக்கு அங்கே பிடிக்கல.. அதான் வந்துட்டேன்.. பாரிவேந்தர் இந்த 3 விஷயம்தான் எனக்கு அங்கே பிடிக்கல.. அதான் வந்துட்டேன்.. பாரிவேந்தர்

    பெரியகுளம்

    பெரியகுளம்

    கட்சிக்காக எத்தனையோ பேர் மாவட்டத்தில் இருக்கிறார்கள், அப்படி இருக்கும்போது மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு தராமல் சம்பந்தமே இல்லாமல் சென்னையில் வேலை பார்த்து வரும் ஒருவருக்கு, சீட் தருவது நியாயமா என்று பெரியகுளம் அதிமுக நிர்வாகிகள் கேள்வி எழுப்பினர்.

    கேள்விகள்

    கேள்விகள்

    இது சம்பந்தமாக அதிமுக தலைமைக்கும் நேற்று முதல் புகார்களை அனுப்ப ஆரம்பித்தனர். கட்சிக்காக முருகன் என்ன செய்திருக்கிறார், பெரியகுளத்தில் எந்த வகையில் தனது உழைப்பை அவர் தந்திருக்கிறார் என்ற கேள்விகளும் எழுந்தவாரியாக இருந்தன.

    ராஜினாமா தயக்கம்

    ராஜினாமா தயக்கம்

    'தேர்தலில் போட்டியிட போவதால், அரசு பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெறுவேன், அதற்கான நடவடிக்கையை எடுத்துவிட்டேன் என்று சொல்லிதான் முருகன் சீட்டே வாங்கினார். ஆனால், சீட் கிடைச்சதும், அரசு வேலையை ராஜினாமா செய்ய தயங்கியதாக சொல்லப்படுகிறது.

    மயில்வேல்

    மயில்வேல்

    இதனால் எப்படியும் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் மாற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் எழ தொடங்கியது. அதன் அடிப்படையில், மயில்வேல் என்பவருக்கு சீட் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் பேச்சு எழுந்தது. அதன்படியே தற்போது மயில்வேல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    ஜெ.பாணி

    ஜெ.பாணி

    அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். ஜெயலலிதா பாணியில் வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    முருகன் துணை

    முருகன் துணை

    ஏற்கனவே பெரியகுளம் எம்எல்ஏவாக இருந்தவர் கதிர்காமு. இவர் இப்போது அமமுகவுக்கு போய் விட்டார். அக்கட்சி சார்பில் போட்டியிடவுள்ளார். அதிமுக முருகனை அறிவித்தது.. தற்போது மயில்வேலுக்கு மாறி விட்டது.. எல்லாமே முருகனோட பெயர்கள்தான்.. ஆக மொத்தத்தில் முருகப் பெருமான்தான்.. ஏதோ ஒரு வடிவில் இங்கு வெற்றிப் பெறப் போகிறார்!

    English summary
    In Periyakulam By election ADMK Candidate Murugan has replaced by Mayilvel
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X