சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'இனமானம் தன்மானத்திலும் பெரிது'.. 'மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு'.. தந்தை பெரியார் பொன்மொழிகள்

Google Oneindia Tamil News

Recommended Video

    Indian social activi Periyar E. V. Ramasamy's quotes

    சென்னை: தீண்டாமை ஒழிப்பு, சுயமரியாதை, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை, பெண் கல்வி, கடவுள் மறுப்பபு உள்ளிட்டவற்றுக்காக தமிழகத்தில் மிகப்பெரிய குரல் கொடுத்தவர் தந்தை பெரியார். அவரது 141வது பிறந்த நாள் இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

    சமூகத்தில் புரட்சிகளை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார்.இன்று தமிழகத்தில் ஜாதிப்பெயரை யாரும் சேர்த்துக்கொள்ளாமல் விட்டதற்கு காரணம் பெரியார். பெரியாரின் பொன்மொழிகள் சிலவற்றை இப்போது பார்ப்போம்:

    Periyar E. V. Ramasamys quotes

    நான் சொல்கிறேன் என்பதற்காக எதையும் நீங்கள் ஒப்புக்கொள்ளாதீர்கள். பிறகு, மதவாதிகள் புராணத்தை முன்வைத்து பேசுவதை நீங்கள் ஒப்புக் கொள்வதற்கும், இதற்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். நான் பேசியதை வைத்து உங்களுக்குள் நிறைய கேள்விகளை எழுப்புங்கள், அதன் பின்னர் நான் சொன்னது சரியென்கும் பட்சம் ஒப்புக் கொள்ளுங்கள்.

    நம்முடைய மனம் நோகாமலிருக்கப் பிறர் நம்மிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று ஆசைப்படுகிறோமோ அதேபோல் நாம் பிறரிடம் நடந்துகொள்வது தான் ஒழுக்கம்.

    பொழுது விடிஞ்சதும்... டீக்கடையை சுத்தம் செய்யறதுதான்... அந்த சிறுவனுக்கு முதல் வேலை.. மோடி!பொழுது விடிஞ்சதும்... டீக்கடையை சுத்தம் செய்யறதுதான்... அந்த சிறுவனுக்கு முதல் வேலை.. மோடி!

    -ஒழுக்கம் என்பது சமுதாயத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே தன்மையாக இருக்க வேண்டும்.

    -கல்வியினுடைய குறிக்கோள் என்பது பணம் சம்பாதிப்பது மாத்திரம் என்று நினைக்க கூடாது

    -ஒரு சமூகத்திற்குச் சுயமரியாதை வேண்டுமானால் தொழிற் கல்வி மிக அவசியமானது.

    -தன் இனத்தையே அடிமைப்படுத்தி அதைக் கொடுமைபடுத்தி வாழும் கெட்ட குணம் மனித ஜீவனிடத்திலயே அதிகமாய் இருந்து வருகிறது.

    -மனிதன் உலகில் தன்னுடைய சுயமரியாதையை தன் மானத்தை உயிருக்கு சமமாக கொள்ள வேண்டும்.

    -பெண்களுக்கு படிப்பு சொத்துரிமை ஆகியவை இருந்து விட்டால் நாடு கண்டிப்பாக முன்னேற்ற மடைந்து விடும்.

    -நமது நாட்டில் சுதந்திரம் என்பதற்கு அர்த்தமே மற்றவர்கள் சுதந்திரத்தை கெடுப்பது என்று தான் பலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.

    -தீண்டாமை ஓழிய வேண்டுமானால் சாதி ஓழிய வேண்டும். மதம், மனிதனை மிருகமாக்கும், சாதி மனிதனைச் சாக்கடையாக்கும்.

    -மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு

    -பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயர்நாடி

    -முன்நோக்கிச்செல்லும் போது பணிவாக இரு.. ஒருவேளை பின்நோக்கி வர நேரிட்டால் யாராவது உதவுவார்கள்.

    -எங்கே விழுந்தாய் என்று பார்க்க வேண்டியதில்லை, எங்கே வழுக்கியது என்று பார்க்கக வேண்டும்.

    -விதி என்பது மிதிக்கப்பட்டவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் கொதித்து எழுதிருக்க செய்யப்பட்ட சதியாகும்.

    -வாழ்க்கை அவனவன் வாழ்வதற்கு என்று மட்டும் கருதக்கூடாது. மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும்.

    -மற்றவர்களிடம் பழகும் வித்தையையும், ஒழுக்கத்தையும் சிறு வயதிலேயே ஒருவன் கற்றுக்கொண்டானானால் அவனே வாழ்க்கையில் பெரிய மனிதன்.

    -பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணயமும் கட்டுப்பாடும் உறுதியும் தியாக உணர்வும் வேண்டும்.

    -நூறு அறிவாளிகளுடன் மோதுவதைவிட ஒரு மூடனோடு மோதுவது மிகச் சிரமமானது

    -இனமானம் தன்மானத்திலும் பெரிது. உண்மையிலும் பெரிது, பட்டம் பெற்ற கல்வியிலும் பெரிது, பண ஊற்றுள்ள உத்தியோகத்திலும் பெரிது

    English summary
    Indian social activi Periyar E. V. Ramasamy's quotes. He is known as the 'Father of Dravidian Movement
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X