• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

சாமி சிலைகளை அவமதித்தபோது திராவிடர் கழகம் என்ன செய்தது? இந்து மக்கள் கட்சி கேள்வி.. வெடித்த விவாதம்!

Google Oneindia Tamil News

சென்னை: கோவையில் பெரியார் சிலைக்கு அவமரியாதை ஏற்படுத்தியதையடுத்து, அது தொடர்பாக 2 பேர் கைதாகி உள்ளனர்.. அதேசமயம், திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்கள், இந்து கோவில்களில் சாமி சிலைகளை எத்தனையோ முறை அவமரியாதை செய்துள்ளனர்... ஆனால் இதுவரை திக தலைவர் கி.வீரமணி அதை கண்டித்து பேசவோ, அறிக்கை வெளியிடவோ இல்லையே ஏன்? என்று இந்து மக்கள் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.. இதையடுத்து பரபரப்பு விவாதங்கள் சோஷியல் மீடியாவிலும் வெடித்து வருகிறது..!

தமிழகத்தில் பெரியாரின் பெயரை அடிக்கடி நினைவூட்டிகொண்டே இருக்கிறார்கள் மதவாத அரசியல் கும்பல்.. இதனாலேயே பெரியார் சிலை உடைக்கப்படுவதும், அவரது சிலைக்கு காவி மயம் பூசப்படுவதும் நடந்து வருகிறது.

தமிழகம் எப்போதெல்லாம் ஓரளவு அமைதியாக இருக்கிறதோ, அப்போதெல்லம் எங்காவது பெரியார் சிலைக்கு பங்கம் நேர்ந்துவிடுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது..!

கோவையில் பெரியார் சிலை அவமரியாதை.. சிக்கிய இரு இந்து முன்னணி ஆதரவாளர்கள்.. சிறையில் தள்ளிய போலீஸ் கோவையில் பெரியார் சிலை அவமரியாதை.. சிக்கிய இரு இந்து முன்னணி ஆதரவாளர்கள்.. சிறையில் தள்ளிய போலீஸ்

 போராட்டங்கள்

போராட்டங்கள்

இதுபோன்ற சமயங்களில் எல்லாம், திராவிடர் கட்சிகள் கொந்தளிப்பார்கள்.. திமுகவும் கண்டனம் தெரிவிக்கும்.. அதிமுகவும் கண்டனம் தெரிவிக்கும்.. சில போராட்டங்களும் நிகழும்.. ஆனால், அந்த சமயம் அத்தோடு ஓய்ந்து போய்விடுமா என்றால் இல்லை.. மறுபடியும் பெரியார் சிலை உடைத்து நொறுக்கப்படும்.. இதெல்லாம் கடந்த 10 வருட அதிமுக ஆட்சியில் அதிகமாகவே நடந்தது.. அப்போதுகூட ஜெயக்குமார் மட்டுமே வந்து விளக்கம் சொல்வார்..

நடவடிக்கைகள்

நடவடிக்கைகள்

"இது ஒரு ஈன செயல்... இப்படிப்பட்ட செயலில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது கறாரான நடவடிக்கைப் பாயும். இது ஒரு ஜனநாயக நாடு. இங்கு அனைத்து தலைவர்களும் பின்பற்றப்படுவதற்கு உரிமையுண்டு. தங்கள் எதிர்ப்பைக் காட்ட வன்முறையை யாரும் கையில் எடுக்கக் கூடாது" என்று எச்சரித்து விட்டு போவார்.. ஆனால் அது தொடர்பாக இதுவரை எத்தனை பேர் கைதாகி இருக்கிறார்கள் என்பது முழுமையாக தெரியவில்லை.

 கோவை சிலை

கோவை சிலை

அதைவிட இன்னொரு முக்கியமான விஷயம், இப்படியெல்லாம் சிலையை உடைப்பது, ஏதோ மன நலம் பாதிக்கப்பட்டவர்களாகத்தான் இருக்கும் என்று தமிழக போலீசாரே ஒரு முடிவுக்கு வந்ததுடன், அவ்விவகாரத்தை கடந்தும் சென்றுவிட்டனர்.. அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சியில் நடந்த இந்த சம்பவம், எப்படியும் திமுக காலத்தில் நிகழ வாய்ப்பிருக்காது என்றேதான் நம்பப்பட்டது.. ஆனால், திமுக ஆட்சி நடக்கும்போதே இதே அவமதிப்பு நடந்துள்ளது.. கோவையை அடுத்த வெள்ளலூரில் தந்தை பெரியாரின் திருவுருவச் சிலை கடந்த 8ம் தேதி இரவு மர்ம நபர்களால் அவமரியாதை செய்யப்பட்டுள்ளது.

 இந்து முன்னணி

இந்து முன்னணி

சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து, தலையில் குங்குமம் வைத்துள்ளனர்.. இறுதியில் இந்த காரியத்தை செய்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.. அவர்கள் பெயர் அருண் கார்த்தி, மோகன்ராஜ்.. இருவருமே இந்து முன்னணியை சேர்ந்தவர்கள்.. இந்து முன்னணிக்கு இன்னமும் பெரியார் மீதுள்ள பயத்தையே இந்த சம்பவம் வெளிப்படுத்தி உள்ளதாக பார்க்கப்படுகிறது.. அதேசமயம், இந்து மக்கள் கட்சி ஒரு முக்கியமான கேள்வியையும் இங்கு எழுப்பி உள்ளது...

 இந்து மக்கள் கட்சி

இந்து மக்கள் கட்சி

அக்கட்சியின் நிர்வாகி செந்தில் என்பவர் ஒரு டிவி சேனலுக்கு பேட்டி தந்துள்ளார்.. அதுதான் தற்போது விவாதமாக கிளம்பி உள்ளது: அதில், செந்தில் பேசும்போது, "பெரியார் சிலை மட்டுமல்ல எந்த சிலையாக இருந்தாலும் அவமதிப்பு செய்யப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது... ஆனால் திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்கள் பல இடங்களில் இந்துக் கோவில்களில் சாமி சிலைகளை அவமரியாதை செய்துள்ளனர்... ஆனால் இதுவரை தி.க தலைவர் கி. வீரமணி அதை கண்டித்து பேசவோ, அறிக்கை வெளியிடவோ இல்லை... எனினும், இந்து மக்கள் கட்சி பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது தவறு என கண்டிக்கிறது...

 சாமி சிலைகள்

சாமி சிலைகள்

இதேபோல திராவிடர் கழகமும் இந்து சாமி சிலைகள் அவமதிப்பு செய்யப்படும் போது கண்டிக்க வேண்டும், அதாவது பெரியார் அவர்கள் இந்து மதத்திற்கு எதிராக விநாயகர் சிலைகளை உடைத்திருக்கிறார். அவர் நடத்திய போராட்டத்தில் ராமர் உருவப்படம் அவமரியாதை செய்யப்பட்டுள்ளது... ஆக இதற்கு விதை போட்டது திராவிடர்கழகம் தான். பெரியார் தான், அன்றைக்கு திராவிடர் கழகம் செய்தற்கு தற்போது சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடந்து கொண்டிருக்கிறது. திராவிடர் கழகம் தொடர்ந்து இந்து மக்களின் உணர்வுகளையும், இந்து மதத்தையும் இழிவு செய்வதை நிறுத்த வேண்டும், அப்போது மட்டுமே இதுபோன்ற பிரச்சினைகள் முடிவுக்கு வரும்" என்று கூறியுள்ளார்.

வேதங்கள்

வேதங்கள்

பெரியாரை பொறுத்தவரை அவர் கடைசிவரை யாரையுமே காயப்படுத்தாதவர்.. இந்துமதத்தை மட்டுமே பெரியார் குறிவைத்தார் என்பதிலும் உண்மையில்லை.. ஒரு மதமும் வேண்டாம் என்பதுதான் சரியான பேச்சும் திட்டமும் ஆகும். "இந்துமதம் வேதமதம், வேதம், கடவுளால் சொல்லப்பட்டது என்கிறார்கள்... ஆனால் அதை ஏன் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டும் படிக்கிறார்கள்? அவர்களுக்கு மட்டுமே வேதம் படைத்த கடவுள் எப்படி எல்லாருக்குமானவராக இருக்கமுடியும்? வேதங்களில் இருந்துதானே சாதிப்பிரிவுகள் வந்தது? அப்படி சாதியின் பெயரால் மக்களைப் பிரிக்கும் மதம் வேண்டாம்" என்பதுதான் பெரியாரின் அடிப்படையான வாதம்... ஆனால் தான் வளர்த்த ஆதரித்த குழந்தைகள் என்ன மதம் பயிலவேண்டும் என்பதில் அவர் குறுக்கிடவில்லை..

 கோபம் - ஆதங்கம்

கோபம் - ஆதங்கம்

அதுமட்டுமல்ல, தங்களின் சிந்தனையால் அவர்கள் நாத்திகரானால் சரி என்றுதான், கடவுள் வாழ்த்தையும் பெரியார் மறுக்கவில்லை. ஆனால், பெரியார் அன்று காலசூழலில் சொன்ன இந்த கருத்தெல்லாம் இங்கு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதே இந்து மதத்தினரின் கோபமாக கொப்பளித்து கொண்டிருக்க காரணமாகும்.. இதுதான் சிலைகளை சேதப்படுத்தும் அளவுக்கு ஆதங்கமாக நீண்டும் வருகிறது. அதற்காக, அவரது சிலையை சேதப்படுத்துகிறார்கள் என்பதற்காக, இந்துமத சிலைகளை சேதப்படுத்துவதும் ஏற்க முடியாதுதான்.. இதை பெரியாரே ஏற்றிருக்க மாட்டார்.. எனவே, இந்து மக்கள் கட்சியின் செந்தில் சொன்ன கருத்தில் ஓரளவு நியாயம் இருக்கவே செய்கிறது என்றாலும், பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதற்கு நியாயம் கற்பிப்பது போல அவரது பேச்சு இருக்கக்கூடாது என்பதையும் நாம் வலியுறுத்த வேண்டி உள்ளது..

 சுயமரியாதை

சுயமரியாதை

இந்த நிகழ்வுகளை எல்லாம் பார்க்கும்போது இன்னொன்றும் விளங்குகிறது.. தான் இறந்து எத்தனையோ ஆண்டுகள் கடந்த பிறகும் பெரியார்தான் இங்கு பேசுபொருளாக இருக்கிறார் என்றால், அவர் ஒரு சிலை இல்லை.. சுய மரியாதைக்கும் சமூக நீதிக்குமான அடையாளம்.. அவருக்கு காவி சாயம் பூசியவர்களுக்கும் அவரே வழி காட்டி கொண்டே இருக்கிறார்.. பெரியார் இல்லாத சாதி, மத ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் வரையில் பெரியார் இங்குதான் இருப்பார் என்பதும் ஆழ்மனசில் தானாகவே பதிந்து போய்விடுகிறது..!

English summary
Periyar Issue: Hindu peoples party questions DK member Activities and K Veeramani
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X