சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கிராமங்களை தொடர்ந்து பேரூராட்சி, நகராட்சிகளிலும் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி.. தமிழக அரசு

Google Oneindia Tamil News

சென்னை: கிரமங்களை தொடர்ந்து பேரூராட்சி, நகராட்சிகளிலும் சிறிய கோயில்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

Recommended Video

    5 மாதத்திற்கு பிறகு ஆலயங்கள் திறக்கப்பு.. சுவாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள் - வீடியோ

    தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்த விதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும் என்று அறிவித்துள்ள அரசு, ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கை நீடித்துள்ளது.

    தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் "பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதி தவிர, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட பகுதிகளிலும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கு 1.8.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது:

    தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 31 வரை லாக்டவுன் நீடிப்பு - 4 ஞாயிறுகளில் முழு லாக்டவுன்தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 31 வரை லாக்டவுன் நீடிப்பு - 4 ஞாயிறுகளில் முழு லாக்டவுன்

    பேரூராட்சிகளில் திறக்கலாம்

    பேரூராட்சிகளில் திறக்கலாம்

    ஏற்கனவே ஊராட்சிப் பகுதிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய திருக்கோவில்கள், அதாவது 10,000 ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு திருக்கோவில்கள் வருமானம் உள்ள திருக்கோவில்களிலும், சிறிய மசூதிகளிலும், தர்காக்களிலும், தேவலாயங்களிலும் மட்டும் மாவட்ட ஆட்சித் தலைவர்களின் அனுமதியுடன் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படும். பெரிய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொது மக்கள் தரிசனம் அனுமதிக்கப்பட மாட்டாது.

    கட்டுப்பாட்டு பகுதிகள்

    கட்டுப்பாட்டு பகுதிகள்

    • குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144ன் கீழ் பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்ற நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும்.
    • தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்த விதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.
    போக்குவரத்து நிலை

    போக்குவரத்து நிலை

    • அனைத்து, தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் / பணியாளர்களை வீட்டிலிருந்தபடி பணிபுரிய ஊக்குவிப்பதோடு, தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

    • இரயில் மற்றும் விமான போக்குவரத்தைப் பொறுத்தவரை தற்போதுள்ள நிலையே தொடரும்.

    மாவட்டம் விட்டு மாவட்டம்

    மாவட்டம் விட்டு மாவட்டம்


    • ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி, மாவட்டம் விட்டு மாவட்டம் உள்ள நடைமுறைப்படி, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும்போதும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் செல்லும்போதும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் போதும், சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரிடம் / சென்னை மாநகராட்சி ஆணையரிடம் முறைப்படி இ-பாஸ் பெற வேண்டும்.

    சமூக இடைவெளி

    சமூக இடைவெளி

    • தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ம் தேதி, மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, சமூக இடைவெளி, முககவசம் அணிதல் போன்றவற்றை கடைபிடித்து சுதந்திர தின விழா கொண்டாடப்படும் என்று அரசு தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

    English summary
    Government of Tamil Nadu order that Permission to open small temples in municipalities and municipalities following villages. Public will not be allowed in large places of worship
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X