சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெரிய சதி! கிறிஸ்துவ பள்ளியில் மத மாற்றமே இல்லை! பாயும் பீட்டர் அல்போன்ஸ்! "சரஸ்வதி" பின்னால் யாரோ?

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் இயங்கி வரும் கிறித்துவ பள்ளியில் எந்த விதமான மத மாற்ற நடவடிக்கையும் செய்யப்படவில்லை, மாநில குழந்தைகள் மற்றும் நல உரிமை ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி இங்கு நடத்திய ஆய்வு சந்தேகம் தருகிறது என்று மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் இயங்கி வரும் கிறித்துவ பள்ளியில், மத மாற்ற நடவடிக்கைகள் செய்யப்படுவதாக சமீபத்தில் மாநில குழந்தைகள் மற்றும் நல உரிமை ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தெரிவித்தார். பொதுவாக பள்ளிகளில் திடீரென மாநில குழந்தைகள் மற்றும் நல உரிமை ஆணையம் ஆய்வுகளை செய்யாது.

ஆனால் இந்த பள்ளியில் கடந்த 6ஆம் தேதி இந்த பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் நல ஆணையம் ஆய்வு நடத்தியது.

ஒரே நாளில் 100 குழந்தைகள்! காய்ச்சலால் நிரம்பி வழியும் சென்னை மருத்துவமனைகள்! என்ன காரணம்? ஷாக்! ஒரே நாளில் 100 குழந்தைகள்! காய்ச்சலால் நிரம்பி வழியும் சென்னை மருத்துவமனைகள்! என்ன காரணம்? ஷாக்!

 பள்ளி

பள்ளி

ஆய்விற்கு பின் இங்கே ஹாஸ்டல் அனுமதி இன்று செயல்படுவதாக புகார் வைத்தது. மாணவிகளை வற்புறுத்தி பைபிள் படிக்க வைக்க இவர்கள் முயற்சி செய்வதாக புகார் வைத்தது. மாநில குழந்தைகள் மற்றும் நல உரிமை ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி மற்றும் உறுப்பினர் சரண்யா ஜெயக்குமார் ஆகியோர் இந்த ஆய்வுகளை செய்தனர். அதோடு இங்கே உள்ள மாணவிகளை மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தினார். ஆனால் இதில் தமிழ்நாடு அரசு வேறு நிலைப்பாடு எடுத்தது.

மதமாற்றம்

மதமாற்றம்

அதன்படி தமிழ்நாடு அரசு சார்பில் அதிகாரிகள் அங்கு செய்த் ஆய்வில், மாணவ -மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் இங்கே எந்த விதமான மத மாற்ற நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று உறுதியானது. இதை தமிழ்நாடு அரசு அறிக்கையாக வெளியிட்டது. ஆனால் இந்த அறிக்கை வெளியான பின்பும் கூட மாநில குழந்தைகள் மற்றும் நல உரிமை ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி , தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது அந்த பள்ளியில் மத மாற்றம் செய்யப்படுவதாக, 85 பக்கங்கள் கொண்ட அறிக்கையையும் ஆளுநர் ஆர் என் ரவியிடம் அளித்தார்.

பீட்டர் அல்போன்ஸ்

பீட்டர் அல்போன்ஸ்

இந்த நிலையில் அந்த பள்ளியில் மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆய்வு செய்தார். அந்த ஆய்விற்கு பின் பேட்டி அளித்த பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாட்டில் அமைதியை குலைக்க இப்படி செய்கிறார்கள். மதங்களுக்கு இடையில் பிளவை ஏற்படுத்த வேண்டும் என்று இப்படி செய்கிறார்கள். நாங்கள் 40-50 பெற்றோர்களை சந்தித்தோம். அவர்களிடம் பேசினோம். அவர்கள் யாரும் மதமாற்ற குற்றச்சாட்டுகளை வைக்கவில்லை.

இந்துக்கள்

இந்துக்கள்


அவர்கள் எல்லாம் இந்துக்கள்தான். ஆனால் அவர்கள் யாரும் இப்படி மத மாற்ற குற்றச்சாட்டுகளை வைக்கவில்லை. எங்கள் குழந்தைகள் சுதந்திரமாக இருக்கிறார்கள். நாங்கள் எல்லாம் அடித்தட்டில் இருந்து வந்தவர்கள். எங்கள் குழந்தைகள் இந்த ஹாஸ்டலில்தான் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று அவர்களின் பெற்றோர்கள் கூறுகிறார்கள். இந்த மத மாற்ற புகாருக்கு பின் சதி உள்ளது. உள்நோக்கத்தோடு யாரோ இருக்கிறார்கள்.

சந்தேகம்

சந்தேகம்

மாநில குழந்தைகள் மற்றும் நல உரிமை ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி சுயமாக இப்படி செய்கிறாரா அல்லது அவருக்கு பின்னால் நீங்கள் போய் இப்படி செய்யுங்கள். இப்படி பேட்டி கொடுங்கள் என்று தூண்டி விடுகிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதை எல்லாம் விசாரிக்க வேண்டும். விதிகளை மீறி சோதனை செய்துள்ளனர். எந்த விதியையும் மீறி சோதனை செய்துள்ளனர். அதுதான் சந்தேகம் தருகிறது.

சரஸ்வதி பின்னால் யார்?

சரஸ்வதி பின்னால் யார்?

அரசாங்க ஆணையத்தின் அமைப்பே இப்படி செயல்படுவது சந்தேகம் தருகிறது. அந்த ஆணையத்தின் தலைவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போல இரண்டு பள்ளியில் செய்தால் தமிழ்நாடு முழுக்க அது விஷம் போல பரவும் என்று நினைக்கிறார்கள். இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். தமிழ்நாடு அரசுதான் இதை விசாரிக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க வேண்டும், என்று இவர்கள் இப்படி செய்கிறார்கள் என்று நாங்கள் சந்தேகம் கொள்கிறோம். இதை பற்றி முதல்வரிடம் ரிப்போர்ட் கொடுப்போம் என்று பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

English summary
Peter Alphonse accuses State Child Rights Protection Commissioner Saraswati on Christian school issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X