சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மூப்பனாரின் வலதுகரமாக செயல்பட்டவர்... கருணாநிதிக்கு பிடித்தமானவர்.. யார் இந்த பீட்டர் அல்போன்ஸ்

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமனம்?- வீடியோ

    சென்னை: மூப்பனாரின் வலதுகரமாக செயல்பட்ட பீட்டர் அல்போன்ஸ் , அதன் பின்னர் கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் நெருக்கமானவராகவும் இருந்தார்.

    பீட்டர் அல்போன்ஸ் தென்காசியைச் சேர்ந்தவர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் கடந்த 1989, 1991-ஆம் ஆண்டு இரு முறை தென்காசி சட்டசபை தொகுதிக்கு தேர்வு செய்யப்பட்டார். அவர் கடந்த 2006-ஆம் ஆண்டு கடையநல்லூரில் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.

    காங்கிரஸில் இருந்து மூப்பனார் பிரிந்தபோது அவரது தமிழ் மாநில காங்கிரஸில் பீட்டர் இணைந்து பணியாற்றினார். அப்போது மூப்பனாரின் வலதுகரமாக செயல்பட்டவர்.

    பீட்டர்

    பீட்டர்

    மூப்பனாரின் காலத்துக்கு பின்னர் ஜி.கே.வாசனுடன் இணைந்து பணியாற்றினார். கடந்த 2016-ஆம் ஆண்டு ஆண்டு யாருடன் கூட்டணி என்பதில் ஜி.கே.வாசன் உறுதியான முடிவை எடுக்கத் தவறியதால் பீட்டர் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே வந்துவிட்டார்.

    மனப்பக்குவம்

    மனப்பக்குவம்

    மிகச் சிறந்த பேச்சாளரான இவர் கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் மிகவும் நெருக்கமானவர். நல்ல திறமைசாலி. கூட்டணி கட்சிகளை அனுசரித்து செல்லக் கூடிய மனப்பக்குவம் கொண்டவர்.

    பதிலடி

    பதிலடி

    கட்சி நிர்வாகிகளை அனுசரித்து பணியாற்ற வைப்பதில் சிறந்தவர். பொதுக் கூட்டம், அரசியல் பிரசாரம், விவாதம் என எதுவாக இருந்தாலும் வெண்கல குரலால் அனைவரையும் கட்டிப் போட்டுவிடுவார். பதிலடி கொடுப்பதிலும் வல்லமை படைத்தவர்.

    காங்கிரஸ் தலைமை

    காங்கிரஸ் தலைமை

    ஆங்கில புலமை கொண்ட இவர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் சோனியாவின் பேச்சை மொழி பெயர்ப்பு செய்தார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் ஒற்றுமையை மேம்படுத்த அவரை தமிழக மாநில தலைவராக நியமிக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    English summary
    Peter Alphonse who is said to become Tamilnadu Congress Commitee's president by some sources was closest to Moopanar and Karunanidhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X