சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேதா நிலையத்தை ஜெயலலிதா நினைவில்லமாக மாற்றும் முடிவை எதிர்த்த மனு தள்ளுபடி

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: வேதா நிலையத்தை ஜெயலலிதா நினைவில்லமாக மாற்றும் முடிவை எதிர்த்த டிராபிக் ராமசாமி மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் போயஸ் தோட்ட இல்லத்தின் ஒரு பகுதி இருப்பதால், நினைவு இல்லமாக மாற்றும் முடிவை அரசு கைவிட வேண்டுமென தமிழக அரசுக்கு சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மனு அனுப்பி இருந்தார்.

Petition dismissed over govt decision to make Jayalalithaas house Veda Nilayam to become memorial

அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில் இதே கோரிக்கையுடன் கடந்த மாதம் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு விட்டதால் அதை எதிர்த்து வழக்கு தொடரும்படி அறிவுறுத்தியதாகவும், ஆனால் அந்த முறையும் அவசர சட்டத்தை எதிர்த்து வழ்க்கு தொடரவில்லை என சுட்டிக்காட்டப்பட்டது.

மீண்டும் ஒரு சிறுமி.. ரத்த காயங்களுடன் குளத்தில் சடலமாக.. அதிர்ச்சியாக உள்ளது.. முக ஸ்டாலின் வேதனைமீண்டும் ஒரு சிறுமி.. ரத்த காயங்களுடன் குளத்தில் சடலமாக.. அதிர்ச்சியாக உள்ளது.. முக ஸ்டாலின் வேதனை

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதற்கான நகலுடன் முறையான மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு டிராபிக் ராமசாமி மனுவை தள்ளுபடி செய்தனர்.

English summary
traffic ramaamy Petition dismissed in highcourt over govt decision to make Jayalalithaa's house 'Veda Nilayam' to become memorial
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X