சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவனுக்கு ரூ.50 லட்சம் நஷ்டஈடு வழங்க கோரி வழக்கு.. அரசுக்கு நோட்டீஸ்

Google Oneindia Tamil News

சென்னை: மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவனுக்கு 50 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க கோரி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு 4 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை முகலிவாக்கம் தனம் நகர் பகுதியை சேர்ந்த சிறுவன் தினா தனது நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்த போது தெரு விளக்கிற்காக போடப்பட்ட மின் கம்பியால் மின்சாரம் தாக்கி உயிர் இழந்தார்..

petition in HC, Demanding Rs 50 lakh compensation to the dead boy due to electrocuted attack

இந்நிலையில் தனது மகன் இறப்பிற்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி அவரது தந்தை கணேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், மாநகராட்சி மற்றும் மின்சார வாரியத்தின் அலட்சியத்தின் காரணமாக தெரு விளக்கிற்காக சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் இருந்த மின் கம்பியால் மின்சாரம் தாக்கி தன் மகன் உயிரிழந்துள்ளதாகவும், இதற்காக முதலமைச்சர் அறிவித்த 3 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு தொகை தற்போது வரை தங்களுக்கு கிடைக்கபெறவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தபோது, மனு குறித்து 4 வார காலத்திற்குள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்..

உள்ளாட்சித் தேர்தல்... புலி வருது கதையாக உள்ளது... மக்கள் நீதி மய்யம் சாடல் உள்ளாட்சித் தேர்தல்... புலி வருது கதையாக உள்ளது... மக்கள் நீதி மய்யம் சாடல்

English summary
petition in madras High Court, Demanding Rs 50 lakh compensation to the dead boy due to electrocuted attack
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X