சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வளர்ப்பு யானைகளின் நிலையை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரி வழக்கு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் உள்ள வளர்ப்பு யானைகளின் நிலையை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது..

தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 37 வளர்ப்பு யானைகள் உள்ளதாக தமிழக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்

petition on HC: seek to Committee headed by a retired judge to track the status of domesticated elephants

இந்த யானைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்ய கடந்த 2016-ம் ஆண்டு மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டது..

இந்த குழு வளர்ப்பு யானைகளின் உரிமையை முறையாக பராமரிக்கவில்லை என்றும் வளர்ப்பு யானைகளின் நிலையை கண்டறிய ஒய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைக்க தலைமை செயலாளருக்கு உத்தரவிட கோரி சென்னையை சேர்ந்த ஆண்டனி கிளமண்ட் ரூபின் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்..

அநியாயமாக போன 2 உயிர்.. அவனா இப்படி செய்தான்.. எப்பவுமே அமைதியா இருப்பானே.. அதிர்ச்சியில் பள்ளி!அநியாயமாக போன 2 உயிர்.. அவனா இப்படி செய்தான்.. எப்பவுமே அமைதியா இருப்பானே.. அதிர்ச்சியில் பள்ளி!

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி சாஹி, நீதிபதி சுப்ரமணிய பிரசாத் அமர்வு, யானைகள் தொடர்பான வழக்கு வேறோரு அமர்வில் நிலுவையில் இருப்பதால் இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்..

English summary
petition in madras high court; Committee headed by a retired judge to track the status of domesticated elephants
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X