சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆதி திராவிடர் நலத்துறையை.. பட்டியல் சாதிகள் நலத்துறை என மாற்றுக.. ஹைகோர்ட்டில் வழக்கு

Google Oneindia Tamil News

சென்னை: ஆதி திராவிட நலத்துறையை பட்டியல் சாதிகள் நலத்துறை என அறிவிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 76 இனங்களை பட்டியல் இனத்தவர்கள் என கண்டறியப்பட்டு, அவர்களுக்காக ஆதிதிராவிடர் நலத்துறை ஏற்படுத்தப்பட்டது.

petition seeking to rename adi dravidar welfare department

இந்த ஆதிதிராவிடர் நலத்துறையின் பெயரை, பட்டியல் சாதிகள் நலத்துறை என அறிவிக்க கோரி சென்னையை சேர்ந்த மாரிமுத்து என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், பட்டியல் இனத்தவர்களுக்கான நலத்துறையின் பெயர் தவறாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருப்பதாகவும், ஆதி திராவிடர் என்பது பட்ட்டியலினங்களில் உள்ள 76 இனங்களில் ஒன்று என்றும் தெரிவிக்கப்பட்டது.

அரசு மருத்துவர்களை பழி வாங்கக் கூடாது.. அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவுஅரசு மருத்துவர்களை பழி வாங்கக் கூடாது.. அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்த வழக்கில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி குழு அமைக்கப்பட்டு, ஆய்வு செய்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தமிழக அரசின் முடிவு என்ன என்பதை தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பெற மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதி, விசாரணையை டிசம்பர் 2ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

English summary
A petition has been filed in Madras HC, seeking to rename Adi Dravidar welfare department as scheduled caste welfare department.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X