சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்வு.. 22ஆவது நாளாக புதிய உச்சம்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் பெட்ரோல் டீசல் விலை 22ஆவது நாளாக உயர்ந்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூ 83.59-க்கும் டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ 77.61 க்கும் விற்பனையாகிறது.

லாக்டவுன் நேரத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து வரலாறு காணாத விலை வீழ்ச்சியை அடைந்தது. இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் எந்தக் குறைப்பையும் எண்ணெய் நிறுவனங்கள் செய்யவில்லை.

Petrol and Diesel price hike for the 22nd consecutive days

இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தவுடன் பெட்ரோல் டீசல் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றி வருகின்றன. அந்த வகையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 21 பைசாவும் உயர்ந்துள்ளது.

அந்த வகையில் கடந்த 21 நாட்களில்டீசல் விலை லிட்டருக்கு ரூ 11 உயர்ந்துள்ளது. இதுவரை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 9.12-ம் டீசல் விலை லிட்டருக்கு ரூ 11.01 அதிகரித்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்று ரூ 83.59 ஆகவும் டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ 77.61 ஆகவும் உயர்ந்துள்ளது.

சாத்தான்குளம்.. ரஜினி ஏன் வாயே திறக்காமல் அமைதியாக உள்ளார்.. மனசை உலுக்கவில்லையா.. மக்கள் கேள்வி!சாத்தான்குளம்.. ரஜினி ஏன் வாயே திறக்காமல் அமைதியாக உள்ளார்.. மனசை உலுக்கவில்லையா.. மக்கள் கேள்வி!

டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ 80.38 ஆகவும் டீசல் விலை 80.40 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 87.14 ரூபாயாகவும் டீசல் விலை லிட்டருக்கு ரூ 78.51 ஆகவும் உயர்ந்துள்ளது.

தொடர்ந்து இந்த விலையுயர்வால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

English summary
Petrol and Diesel price hike for the 22nd consecutive days. Motorists affected heavily.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X