சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரு பக்கம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு... சமையல் கேஸ் சிலிண்டர் விலையும் கிடுகிடு

பெட்ரோல் விலை 26 காசுகள் அதிகரித்து லிட்டர் 89.39 ரூபாய்க்கும், டீசல் விலையில் 29 காசுகள் உயர்ந்து 82.33 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சமையல் எரிவாயு சிலிண்டரும் 25 ரூபாய் அதிகரித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: பெட்ரோல் விலை 26 காசுகள் அதிகரித்து சென்னையில் ஒரு லிட்டர் 89.39 ரூபாய்க்கும், டீசல் ஒரு லிட்டர் 29 காசுகள் உயர்ந்து 82.33 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்ந்து 735 ரூபாய்க்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சர்வ தேச கட்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில், பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களாகவே பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர்.

Petrol and diesel Price rate hike - LPG gas cylinder price hike Rs 25

சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 89.13 ரூபாய், டீசல் லிட்டர் 82.04 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், பெட்ரோல் விலை 26 காசுகள் அதிகரித்து லிட்டர் 89.39 ரூபாய்க்கும், டீசல் விலையில் 29 காசுகள் உயர்ந்து 82.33 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 90 ரூபாயாக உயர்ந்து விடும்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்கா டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றை கணக்கிட்டு சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலையை மாதத்திற்கு ஒரு முறை முதல் தேதியில் எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகின்றன.

அந்தவகையில் நடப்பு மாதம் முதல் தேதியில் வீட்டு சிலிண்டர்களுக்கான விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டர்களின் விலை சென்னையில் ரூ.91 அதிகரித்து ரூ.1,649 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று வீடுகளுக்கு வினியோகிக்கப்பட்ட 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக மானியமில்லாத சிலிண்டர் விலை ரூ.25 விலை அதிகரிக்கப்பட்டு இருந்தது. இதனால் கடந்த மாதம் 710 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சிலிண்டர் 735 ருபாய்க்கு வினியோகிக்கப்பட்டது. சென்னையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு கடந்த மாத இறுதியில் இருந்து மானியமாக ரூ.24 மட்டுமே வந்து உள்ளது. ஒரு சிலருக்கு அவர்களுடைய வங்கி கணக்கில் மானியமே வரவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. சமையல் கேஸ் சிலிண்டர் டெல்லி, மும்பையில் ரூ.719, கொல்கத்தாவில் ரூ.745.50 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.

English summary
Petrol and diesel prices continue to rise. In Chennai, petrol price has gone up by 26 paise to 89 rupees 39 paise per liter from yesterday. Similarly, diesel price has gone up by 29 paise to Rs 82.33 per liter from yesterday. The price of LPG gas cylinder has been increased by Rs 25.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X