India
  • search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

29வது நாளாக.. பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் மாற்றம் இல்லை.. சென்னையில் விலை என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: நாடு முழுக்க 29வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. சென்னையில் அதே விலையில் இன்றும் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் கடந்த மாதம் முழுக்க பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்தது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உச்சம் தொட்டது. தேர்தல் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது.

Petrol and diesel prices did not change for the 29th day in India

நாளுக்கு நாள் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் தானாக போக்குவரத்து செலவும் உயரும். இதுவே பணவீக்கத்திற்கும் ஒரு வகையில் காரணமாக அமைந்தது. மே மாதத்திற்கான மொத்த விலை பணவீக்கம் 15.88 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த 24 வருடங்களில் இதுதான் மிக அதிகம் ஆகும்.

சில்லறை வர்த்தகம் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் காய்கறிகள் விலை, அத்தியாவசிய பொருட்களின் விலை தீவிரமாக உயர்ந்தது. மக்கள் இடையே இது கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. இதையடுத்து பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டது.

பெட்ரோல் மீதான கலால் வரியை 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 6 ரூபாயும் மத்திய அரசு குறைத்துள்ளது. இதன் மூலம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 குறைக்கப்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 50 காசும் குறைக்கப்பட்டது.

28வது நாளாக.. இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை.. சென்னையில் நிலவரம் என்ன? 28வது நாளாக.. இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை.. சென்னையில் நிலவரம் என்ன?

அதன்பின் பெட்ரோல் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த நிலையில் நாடு முழுக்க 29வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் 94 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

டெல்லியில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூபாய் 96.35 விற்கப்படுகிறது. அதேபோல் டீசல் ஒரு லிட்டர் ரூபாய் 89.52 க்கு விற்கப்படுகிறது. பெங்களூரில் பெட்ரோல் விலை லிட்டர் 101.94 ரூபாயை தாண்டி உள்ளது. டீசல் விலை 87.89 ரூபாயை தாண்டி உள்ளது.

English summary
'No Change in Petrol, diesel price today for consecutive 29rd day in India: What is the rate today? நாடு முழுக்க 29வது நாளாக பெட்ரோல், டீசல் இன்றும் விலையில் மாற்றமில்லை. சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X