28வது நாளாக.. இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை.. சென்னையில் நிலவரம் என்ன?
சென்னை: நாடு முழுக்க 28வது நாளாக பெட்ரோல், டீசல் இன்றும் விலையில் மாற்றமில்லை. சென்னையில் அதே விலையில் இன்றும் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உச்சம் தொட்டது. இந்தியாவில் கடந்த மாதம் முழுக்க தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது. நாளுக்கு நாள் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதுவே பணவீக்கத்திற்கும் ஒரு வகையில் காரணமாக அமைந்தது. மக்கள் இடையே இது கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. மே மாதத்திற்கான மொத்த விலை பணவீக்கம் 15.88 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த 24 வருடங்களில் இதுதான் மிக அதிகம் ஆகும். சில்லறை வர்த்தகம் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டது. மொத்தமாக பணவீக்கமும் இதனால் உச்சம் தொட்டது.
மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து கடந்த 4 வாரங்களுக்கு முன் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. பெட்ரோல் மீதான கலால் வரியை 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 6 ரூபாயும் மத்திய அரசு குறைத்துள்ளது. இதன் மூலம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 குறைக்கப்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 50 காசும் குறைக்கப்பட்டது.
அதன்பின் பெட்ரோல் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த நிலையில் நாடு முழுக்க 28வது நாளாக பெட்ரோல், டீசல் இன்றும் விலையில் மாற்றமில்லை. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கு விற்பனை செய்யபடுகிறது. ஒரு லிட்டர் டீசல் 94 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
டெல்லியில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூபாய் 96.35 விற்கப்படுகிறது. அதேபோல் டீசல் ஒரு லிட்டர் ரூபாய் 89.52 க்கு விற்கப்படுகிறது. பெங்களூரில் பெட்ரோல் விலை லிட்டர் 101.94 ரூபாயை தாண்டி உள்ளது. டீசல் விலை 87.89 ரூபாயை தாண்டி உள்ளது.