சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்றும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.. சேலத்தில் 1 லிட்டர் டீசல் விலை 100-ஐ தாண்டியது

Google Oneindia Tamil News

சென்னை: பெட்ரோல், டீசல் விலை கடந்த 21 நாட்களில் இன்று, 18வது முறையாக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்து 103.61 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து 99.59 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Recommended Video

    மீண்டும் உச்சத்தை எட்டும் பெட்ரோல், டீசல் விலை: ஷாக்கில் வாகன ஓட்டிகள்! | Oct 21 2021

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினமும் எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு மாற்றி அமைத்து வருகிறது.

    கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்து வருகின்றனர். இதனால், நாட்டின் பெரும்பாலான நகரங்களில் பெட்ரோல் ரூ107க்கு அதிகமாகவும், டீசல் ரூ100க்கு அதிகமாகவும் விற்பனையாகிறது.

    பெட்ரோல் டீசல் விலை உயர இதுதான் காரணமா.. கர்நாடகா மாநில அமைச்சரின் வினோத விளக்கம் பெட்ரோல் டீசல் விலை உயர இதுதான் காரணமா.. கர்நாடகா மாநில அமைச்சரின் வினோத விளக்கம்

    18வது நாளாக உயர்வு

    18வது நாளாக உயர்வு

    இம்மாதத்தில் 4,18,19 தேதிகளில் தவிர 18வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 30 காசும், டீசல் 33 காசும் அதிகரிக்கப்பட்டது.
    சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 103.31 ரூபாய், டீசல் லிட்டர் 99.26 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    சென்னை விலை நிலவரம்

    சென்னை விலை நிலவரம்

    இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்து 103.61 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து 99.59 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 100ஐ நெருங்கி விட்டது.

    சேலம் டீசல் விலை

    சேலம் டீசல் விலை

    அதேநேரம், சேலத்தில் நேற்றே ஒரு லிட்டர் டீசல் விலை 100 ரூபாயை தாண்டி விட்டது. நேற்று சேலம் மாவட்டத்தில் பெட்ரோல் ரூ103.33ல் இருந்து 30 காசு அதிகரித்து ரூ103.63 ஆகவும், டீசல் ரூ99.27ல் இருந்து 33 காசு அதிகரித்து ரூ99.60 ஆகவும் விற்கிறது. அதேசமயம் சேலம் மாநகரில் டீசல் விலை வரலாற்றில் முதன் முறையாக ரூ100யை தாண்டியது டீசல் விலை.

    ஊரடங்கு உத்தரவு

    ஊரடங்கு உத்தரவு

    நாடு முழுதும், கொரோனா பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன. தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Petrol and diesel prices have risen for the 18th time in the last 21 days today. In Chennai today, petrol was sold at Rs 103.61 per liter, up 30 paise, and diesel at Rs 99.59 per liter, up 33 paise.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X