சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா.. தொடர்ந்து சரியும் கச்சா எண்ணெய் விலை.. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையும் லேசான சரிவு!

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 16 காசு குறைந்து விற்பனை ஆகிறது, கொரோனா வைரஸ் காரணமாக கச்சா எண்ணெய் விலை சரிவை சந்தித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 16 காசு குறைந்து விற்பனை ஆகிறது, கொரோனா வைரஸ் காரணமாக கச்சா எண்ணெய் விலை சரிவை சந்தித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுக்க பொருளாதாரம் பெரிய சரிவை சந்தித்துள்ளது. அதேபோல் பல நாடுகளில் பங்குச்சந்தை பெரிய அளவில் தினமும் சரிவை சந்தித்துள்ளது. இந்தியாவிலும் மும்பை வர்த்தகம் சரிந்து வருகிறது.

Petrol, Diesel changed slightly today in India amidst Coronavirus spreads in Middle East

மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் அங்கு கச்சா எண்ணெய் உற்பத்தி பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. கச்சா எண்ணெய் தேவையும் குறைந்துள்ளது.

இதனால் கடந்த வாரம் முழுக்க தொடர்ச்சியாக கச்சா எண்ணெய் விலை சரிந்தது. கச்சா எண்ணெய் விலை 11.5% சரிந்தது. இடையில் கொஞ்சம் முன்னேற்றம் அடைந்த கச்சா எண்ணெய் விலை மீண்டும் சரிவை நோக்கி சென்றுள்ளது. WTI கச்சா எண்ணெய் 5.58% குறைந்துள்ளது. பிரென்ட் ஆயில் 5.73% குறைந்துள்ளது. ஒபெக் பாஸ்கெட் மட்டும் 2.88 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

தயாராக இருங்கள்.. கொரோனாவை பெருந்தொற்றுநோயாக அறிவித்தது உலக சுகாதார மையம்.. மிக முக்கிய அறிக்கை!தயாராக இருங்கள்.. கொரோனாவை பெருந்தொற்றுநோயாக அறிவித்தது உலக சுகாதார மையம்.. மிக முக்கிய அறிக்கை!

ஆனால் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. லேசான சரிவு மட்டுமே ஏற்பட்டுள்ளது. டெல்லியில் பெட்ரோல் விலை 70.14 ரூபாய்க்கும், டீசல் விலை 62.89 ரூபாய்க்கும் விற்கிறது. மும்பையில் பெட்ரோல் விலை 75.84 ரூபாய்க்கும், டீசல் விலை 65.84 ரூபாய்க்கும் விற்கிறது. பெங்களூரில் பெட்ரோல் விலை 72.54ரூபாய்க்கும், டீசல் விலை 65.04 ரூபாய்க்கும் விற்கிறது.

இந்த நிலையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 16 காசு குறைந்தது. இதனால் பெட்ரோல் விலை ரூ.72.86க்கு விற்பனை ஆகிறது. ஒரு லிட்டர் டீசல் விலை 13 காசு குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை ரூ.66.35க்கு விற்பனையாகிறது.இன்னும் சில நாட்களில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Petrol, Diesel changed slightly today in India amidst Coronavirus spreads in Middle East and the USA.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X