சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மத்திய பட்ஜெட்டில் புதிதாக சேர்க்கப்பட்ட வரி.. சென்னையில் எகிறியது பெட்ரோல், டீசல் விலை!

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை: மக்களை திருப்திபடுத்தியதா 2019 மத்திய பட்ஜெட்..? சாமானியர்களின் பதில்கள் இதோ...

    சென்னை: மத்திய பட்ஜெட்டில் புதிதாக சேர்க்கப்பட்ட வரியால் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது.

    பிரதமர் மோடி தலைமையிலான அரசு மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சியமைத்துள்ளது. இதனை தொடர்ந்து, 2019 - 2020 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதல் முறையாக நேற்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் சாமானிய மக்களுக்கு எந்த பலனும் இல்லை என அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    2.50 காசுகளுக்கு மேல் உயர்வு

    2.50 காசுகளுக்கு மேல் உயர்வு

    இந்நிலையில் பட்ஜெட்டில் வரி உயர்த்தப்பட்டதான் காரணமாக பெட்ரோல் டீசல் விலை உயரும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 50 காசுகளுக்கு மேல் உயர்ந்துள்ளது.

    சாலை மேம்பாடு

    சாலை மேம்பாடு

    பட்ஜெட்டில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு விதிக்கப்பட்டு வரும் சிறப்பு கூடுதல் கலால் வரி தலா ஒரு ரூபாய் உயர்த்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். இதன் மூலம் திரட்டப்படும் நிதி சாலை மேம்பாடு உள்ளிட்ட கட்டமைப்பு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுருந்தார்.

    ஒரு லிட்டர் பெட்ரோல்

    ஒரு லிட்டர் பெட்ரோல்

    அதன்படி சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.57 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் 75.72 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    ஒரு லிட்டர் டீசல்

    ஒரு லிட்டர் டீசல்

    இதேபோல் டீசல் விலை லிட்டருக்கு 2.52 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் டீசல் 70.48 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    உள்ளூர் வரிகளை பொறுத்து

    உள்ளூர் வரிகளை பொறுத்து

    இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. பல மாநிலங்களிலும் உள்ளூர் வரிகளை பொறுத்து பெட்ரோல் டீசல் விலை நிர்ணயிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Petrol Diesel price has increased above two Rs 2 per litter in Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X