• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

போபாலில் ஒரு லிட்டர் 101 ரூபாயை தாண்டிய பெட்ரோல் - சென்னையில் எவ்வளவு தெரியுமா

Google Oneindia Tamil News

சென்னை: பெட்ரோல்,டீசல் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. போபாலில் ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாயை தாண்டியுள்ளது. சென்னையில் பெட்ரோல் இன்று ஒரு லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து ரூ 95.28 ஆகவும், டீசல் லிட்டருக்கு 28 காசுகள் அதிகரித்து 89.39 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.மே மாதத்தில் 14வது முறையாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதத்திற்கு இரு முறை பெட்ரோல் - டீசலின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வந்த நிலையில் தற்போது அவை தினசரி என்ற அளவில் நிர்ணயிக்கப்படுகின்றன.

நர்ஸ் செய்த பகீர்.. சடலத்திடம்.. அதுவும் கொரோனா நோயாளியின் பிணத்திடம்.. அதிர்ச்சி அபேஸ்..!நர்ஸ் செய்த பகீர்.. சடலத்திடம்.. அதுவும் கொரோனா நோயாளியின் பிணத்திடம்.. அதிர்ச்சி அபேஸ்..!

நாடு முழுதும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த ஆண்டு மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை உயர்வைக்கண்டித்து எதிர்கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

பீகார் தேர்தலை முன்னிட்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் விலை உயர்வு செய்யப்படாமல் இருந்த நிலையில் பீகார் தேர்தல் முடிந்த உடன் நவம்பர் 20ஆம் தேதி முதல் மீண்டும் விலை உயரத்தொடங்கியது. தினசரி விலை உயர்வினால் பல மாநிலங்களில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 100 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது.

விலை உயர்வு நீடிப்பு

விலை உயர்வு நீடிப்பு

இந்த நிலையில் தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் மார்ச் மாதம் முதல் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி இருந்தது. சில நாட்கள் விலைகள் குறைக்கப்பட்டன. இந்த நிலையில் மே 2 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடன் அடுத்தடுத்த நாட்களில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது.

இன்று விலை அதிகரிப்பு

இன்று விலை அதிகரிப்பு

இந்த நிலையில் இன்றைய தினம் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 22 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் ஒரு லிட்டருக்கு28 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 95.28 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் 89.39 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

100 ரூபாயை தாண்டியது

100 ரூபாயை தாண்டியது

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 101.77 ஆக விற்பனை செய்யப்படுகிறது. டீசல் ஒரு லிட்டர் ரூ. 93.07 ஆக விற்பனையாகிறது. மும்பையில் ஒரு லிட்டர் ரூ. 99.94 ஆகவும் டீசல் ரூ. 91.87 ஆகவும் விற்பனையாகிறது. கொல்கத்தாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.93.72 ஆகவும் டீசல் ஒரு லிட்டர் ரூ. 87.46 ஆகவும் விற்பனையாகிறது. மே மாதத்தில் 14வது முறையாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது.

English summary
Petrol and diesel rates were yet again revised on Thursday by the oil marketing companies. Fuel prices have witnessed sporadic rise in the last few days. Petrol price inched towards the Rs 100 mark in Mumbai on Thursday after fuel rates were hiked again. Petrol price was increased by 22 paise per litre and diesel by 28paise a litre in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X