ஜூன் முதல் வாரம் ஓவர்.. பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் உண்டா.. சென்னையில் என்ன விலை தெரியுமா?
சென்னை: நாட்டில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 17ஆவது நாளாக எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் கச்சா எண்ணெய் விலையைப் பொறுத்து, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.
கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயரும். அங்குக் கச்சா எண்ணெய் விலை குறைந்தால் இங்கும் பெட்ரோல், டீசல் விலை குறையும்.
பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமா? சென்னையில் இன்றைய விலை நிலவரம் தெரியுமா?

தீபாவளி பரிசு
கடந்த ஆண்டு தீபாவளி அன்று குறைக்கப்பட்ட பெட்ரோல், டீசல் விலை பல மாதங்களுக்கு எவ்வித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இருப்பினும், உபி உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டது. பிப். - மார்ச் மாதங்களில் தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது.

விலைவாசி
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்தால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். நாட்டில் பல மாநிலங்களில் பஸ், டாக்ஸி, ஆட்டோ போன்ற போக்குவரத்து சேவைகளின் கட்டணம் உயர்ந்து வருகிறது. டீசல் விலை உயர்வால் சரக்குகளைக் கொண்டு செல்லும் செலவு அதிகரித்தது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்தது.

பாதிப்பு
பல நிறுவனங்களும் தங்கள் பொருட்களின் விலையைக் கணிசமாக உயர்த்தி உள்ளன. சில நிறுவனங்கள் விலையை உயர்த்தாமல் அளவை மட்டும் குறைத்துக் கொண்டன. இதனால் பொதுமக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக உயர்த்தப்பட்டு வந்த பெட்ரோல், டீசல் விலை மே மாதம் முதல் 3 வாரங்களுக்கு எவ்வித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

குறைப்பு
பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியதைத் தொடர்ந்து கடந்த மே 21ஆம் தேதி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது. அதன் பின்னர் கடந்த இரு வாரமாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இன்றைய விலை
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் லிட்டருக்கு ரூ.94.24க்கு விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூபாய் 96.72 விற்கப்படுகிறது. அதேபோல் டீசல் ஒரு லிட்டர் ரூபாய் 89.62க்கு விற்கப்படுகிறது. அதேபோல மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 111.35 ரூபாய்க்கும், டீசல் 97.28 ரூபாய்க்குமே விற்பனை செய்யப்படுகிறது.