சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 காசுகள் உயர்வு.. டீசல் விலையில் மாற்றம் இல்லை!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 காசுகள் உயர்ந்துள்ளது. டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

பெட்ரோல், டீசல் விலையை அந்தந்த எண்ணெய் நிறுவனங்களே அன்றாடம் நிர்ணயித்து வருகின்றன. இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Petrol price hike: What will be the cost of petrol in Chennai?

இதையடுத்து ஏப்ரல், மே மாதம் வரை பெட்ரோல் , டீசல் விலையில் எந்த மாற்றத்தையும் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் செய்யவில்லை. ஆனால் ஜூன் மாதம் முதல் அதன் விலை உயர்ந்து வருகிறது.

கொரோனா ஊரடங்கால் வருமானம் இன்றி தவித்து வரும் மக்களுக்கு இந்த பெட்ரோல், டீசல் விலை கழுத்தை நெருக்கியது. சென்னையில் நேற்று பெட்ரோல் விலை ரூ 84.64 க்கு விற்பனையானது. அது போல் டீசல் விலை லிட்டர் ரூ 78.86-க்கு விற்பனை செய்யப்பட்டது.

நெருப்பில்லாமல் புகையுமா.. ராகுல் காந்திக்கு எதிராக கொந்தளித்து கூலான சீனியர்கள்.. என்ன நடந்தது? நெருப்பில்லாமல் புகையுமா.. ராகுல் காந்திக்கு எதிராக கொந்தளித்து கூலான சீனியர்கள்.. என்ன நடந்தது?

இன்றைய தினம் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 காசுகள் உயர்ந்தது. அதன்படி இன்று பெட்ரோலின் விலை ரூ 84.73 ஆகும். டீசல் விலையில் எந்தவித மாற்றமும் செய்யவில்லை. அதனால் டீசல் நேற்றைய விலைக்கே விற்கப்படுகிறது.

English summary
Petrol and Diesel price hike: Petrol price hikes by 9 paise and Diesel remains the same price without any hike.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X