சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு - சென்னையில் 1லிட் ரூ. 91.19 டீசல் ரூ. 84.44

சென்னையில் பெட்ரோல் விலை புதிய உச்சமாக ஒரு லிட்டர் ரூ. 91 ரூபாயை தாண்டியுள்ளது. கடந்த ஒரு வார காலமாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 23 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு 91 ரூபாய் 19 காசுகளாக ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதே போல டீசலின் விலையும் 28 காசுகள் உயர்ந்து ஒரு விட்டர் 84 ரூபாய் 44 காசுகளாக விற்பனையாகிறது. இதே நிலை நீடித்தால் விரைவில் 100 ரூபாயை தொடும் என்ற அச்சம் வாகன ஓட்டிகளிடையே எழுந்துள்ளது.

சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதத்திற்கு இரு முறை பெட்ரோல் - டீசலின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வந்த நிலையில் தற்போது அவை தினசரி என்ற அளவில் நிர்ணயிக்கப்படுகின்றன. இருப்பினும் இவற்றின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வரத்தான் செய்கிறது.

Petrol price hits record high at Rs 91.19 per liter in Chennai

நாடு முழுதும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

எதிர்கட்சியினரின் போராட்டம், பீகார் மாநில தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் டீசல் விலை உயர்வு கடந்த ஜனவரியில் இருந்து மீண்டும் ராக்கெட் வேகத்தில் உயரத் தொடங்கியுள்ளது. கடந்த ஒரு வாரகாலமாக பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. டீசலின் விலையும் உயரத் தொடங்கியுள்ளது.

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் 23 காசுகள் உயர்ந்து, 91 ரூபாய் 19 காசுகளாக விற்பனையாகிறது. டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் அதிகரித்து, 84 ரூபாய் 44 காசுகளாக விற்பனையாகி வருகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை வாகன ஓட்டிகளை கலக்கம் அடைய செய்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 10.93 கோடி பேர் பாதிப்பு - 8.16 கோடி பேர் மீண்டனர் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 10.93 கோடி பேர் பாதிப்பு - 8.16 கோடி பேர் மீண்டனர்

பெட்ரோல் விலை தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டிவருவதால் அத்தியாவசிப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும் என்று பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

English summary
Petrol and diesel prices have reached new high in Tamil Nadu today. In Chennai, petrol price has gone up by 23 paise to 91 rupees 19 paise per litre from yesterday. Similarly, the price of diesel has gone up by 28 paise to Rs 84.44 per litre.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X