ஒரு பக்கம் பெட்ரோல் விலை உயர்வு... மறுபக்கம் எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை அதிகரிப்பு
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
சென்னை: பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளன. சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 13 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு 85 ரூபாய்44பைசாவாக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசல் விலை நேற்றைய விலையிலிருந்து 22 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு 78 ரூபாய் 06 பைசாவாக விற்பனை செய்யப்படுகிறது. எல்பிஜி கேஸ் சிலிண்டரின் 56 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 13 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.85.44ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசல் விலை நேற்றைய விலையிலிருந்து 22 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.78.06 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.
சென்னையில், 19 கிலோ எல்பிஜி கேஸ் சிலிண்டரின் விலை சிலிண்டருக்கு ரூ .1,354.50 லிருந்து ரூ .1,410.50 ஆக உயர்ந்துள்ளது. இங்கு சிலிண்டருக்கு விலை ரூ .56 அதிகரித்துள்ளது. இங்கே 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.610 ஆக உள்ளது.
எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் டிசம்பர் மாதத்திற்கான எரிவாயு விலையை வெளியிட்டுள்ளன. ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களை தொடர்ந்து இந்த மாதமும் எல்பிஜி கேஸ் சிலிண்டரின் விலையில் மாறவில்லை, ஆனால் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வணிக சிலிண்டர்கள் விலை உயர்ந்தன.
டிசம்பர் மாதத்தில், எண்ணெய் நிறுவனங்கள் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் 14.2 கிலோ சிலிண்டரின் விலையை மானியமின்றி 594 ரூபாயாக வைத்திருக்கின்றன. மற்ற நகரங்களிலும் உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இருப்பினும், வணிக சிலிண்டர்களின் விலை ரூ.56 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில், 19 கிலோ எல்பிஜி கேஸ் சிலிண்டரின் விலை ரூ .1,296 லிருந்து ரூ .1,351.50 ஆக உயர்ந்துள்ளது. விலை சிலிண்டருக்கு ரூ .55 அதிகரித்துள்ளது. இங்கு வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர் விலை 620.50 ரூபாய் ஆக உள்ளது.
மும்பையில், 19 கிலோ எல்பிஜி கேஸ் சிலிண்டரின் விலை சிலிண்டருக்கு ரூ .1,189.50 லிருந்து ரூ .1,244 ஆக உயர்ந்துள்ளது. இங்குள்ள விலை சிலிண்டருக்கு ரூ .55 அதிகரித்துள்ளது. 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ .594 ஆக உள்ளது.
சென்னையில், 19 கிலோ எல்பிஜி கேஸ் சிலிண்டரின் விலை சிலிண்டருக்கு ரூ .1,354.50 லிருந்து ரூ .1,410.50 ஆக உயர்ந்துள்ளது. இங்கு சிலிண்டருக்கு விலை ரூ .56 அதிகரித்துள்ளது. வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.610 ஆக உள்ளது.