சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை... சென்னை விலை நிலவரம்

Google Oneindia Tamil News

சென்னை: ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத அளவில் பெட்ரோல் விலை நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு இன்று 5 காசுகள் அதிகரித்து ரூ.75.90 என்ற உச்சத்தை தொட்டுள்ளது.

சென்னையில் டீசல் விலையும் ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத அளவாக உயர்ந்து ரூ.70.44 ஆக காணப்படுகிறது.

தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறி கட்டும் என்று பழமொழி சொல்வார்கள். அப்படித்தான் ஈரானும், அமெரிக்காவும் இடையே நடந்த சண்டையில் சிக்கிய இந்திய அரசின் நிலையும் உள்ளது.

2 நாட்கள்தான் இருக்கிறது.. சீக்கிரம் முடிவெடுங்கள்.. ஈரானுக்கு எதிராக இந்தியாவை நெருக்கும் டிரம்ப்! 2 நாட்கள்தான் இருக்கிறது.. சீக்கிரம் முடிவெடுங்கள்.. ஈரானுக்கு எதிராக இந்தியாவை நெருக்கும் டிரம்ப்!

அறிகுறிகள் ஆரம்பம்

அறிகுறிகள் ஆரம்பம்

அமெரிக்காவின் பேச்சை கேட்டு ஈரானிடம் பெட்ரோல் வாங்குவதை இந்தியா இன்னும் இரண்டு நாளில் நிறுத்தினால், தென்னை மரத்தில் ஏறி தேள் கொட்டிய விவசாயியின் நிலையைப்போல் இந்தியர்கள் ஆகப்போகிறார்கள். எனினும் அதற்காக அறிகுறிகள் இப்போதே ஆரம்பம் ஆகிவிட்டதாக தெரிகிறது. ஏனெனில் இந்தியாவில் பெட்ரோல் விலை ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது.

புதிய உச்சம்

புதிய உச்சம்

ஏப்ரல் 1ம்தேதி பெட்ரோல் விலை 75.62 காசாக இருந்த நிலையில், இன்று ஏப்ரல் 30ம் தேதி ரூ.75.90 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 5 பைசா உயர்ந்துள்ளது. இது இந்த மாதத்தின் அதிகபட்ச உயர்வு ஆகும். ஏனெனில் தேர்தல் காரணமாக இதுவரை பெட்ரோல், டீசல் விலை பெரிய அளவில் உயர்த்தப்படவில்லை.

விலை அதிகரிக்கும்

விலை அதிகரிக்கும்

ஆனால் மே மாதத்தில் நிலைமை அப்படியே இருக்கும் என்று சொல்ல முடியாது. குறிப்பாக ஈரானிடம் இந்திய ரூபாயை கொடுத்து கச்சா எண்ணையை வாங்கி வரும் இந்திய அரசு, மே 2ம் தேதிக்கு பிறகு வாங்குவதை நிறுத்தினால், அனைத்து கடட மக்களவை தேர்தலுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை நிச்சயம் கணிசமாக அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளது.

கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை

இதனிடையே கடந்த 3நாட்களாக உயராமல் இருந்த டீசல் விலையும் இன்று 5 காசுகள் அதிகரித்து ரூ.70.44 ஆக உயர்ந்துள்ளது. இது ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத அளவாகும். ஏப்ரல் 1ம்தேதி ரூ.69.78 ஆக இருந்த நிலையில், கடந்த ஏப்ரல் 26ம் தேதி 8 காசுகள் அதிகரித்து லிட்டர் டீசல் ரூ.70.34 காசுகளாக உயர்ந்து காணப்பட்டது. தற்போது ஏப்ரல் 30ம் தேதி ரூ.70.44 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஏழு நாட்களில் பெட்ரோல்,டீசல் விலை 3 முறை உயர்ந்துள்ளது. ஒரே பேரல் கச்சா எண்ணெய் விலையை ஏப்ரல் மாதத்தில் 75 டாலராக அதாவது 30 சதவீதம் உயர்ந்து காணப்பட்டது. எனினும் தேர்தல் காரணமாக இந்தியாவில் விலை அதிகரிக்கப்படவில்லை.

English summary
The oil marketing companies have increased the petrol and diesel prices by prices 5-6 paise in Chennai and many cities
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X