சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெட்ரோல் லிட்டருக்கு 12 காசுகள் உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.84.64க்கு விற்பனை

சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 12 காசுகள் அதிகரித்து ரூ.84.64 என்ற விலையில் இன்று விற்பனை செய்யப்படுகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் பெட்ரோல் விலை இன்று 12 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 84.64 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
டீசல் விலை தொடர்ந்து 28வது நாளாக மாற்றமின்றி லிட்டர் ஒன்றுக்கு ரூ.78.86 என்ற விலையில் விற்கப்படுகிறது.

Petrol Prices Hiked 12 paisa today 1 liter Rs 84.64 in Chennai

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து விற்பனை செய்து வருகின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தாக்கத்தால், கச்சா எண்ணெய் விலை கடந்த பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வெகுவாக குறைந்தது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 15 டாலர் என்ற நிலைக்கும் கீழ் சரிந்து வந்தது.

அப்போதெல்லாம், இந்தியாவில் விலை குறைப்பின் பலனை மக்களுக்கு கொடுக்காமல், வரியை மத்திய, மாநில அரசுகள் உயர்த்திக் கொண்டன. கொரோனா லாக்டவுன் காலமாக இருந்தாலும் கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன.

காங்கிரஸ் கட்சிக்குள் எழும் சலசலப்பு... தலைமை பொறுப்பை ஏற்கத்தயங்கும் ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சிக்குள் எழும் சலசலப்பு... தலைமை பொறுப்பை ஏற்கத்தயங்கும் ராகுல்காந்தி

கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தொடக்கத்தில் பெட்ரோல், டீசல் விலையில் பெரும் மாற்றமின்றி காணப்பட்டது. ஆனால் ஜூன், ஜூலை மாதங்களில் விலை படிப்படியாக உயர தொடங்கியது. இதனையடுத்து எதிர்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படவில்லை.

40 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் விலை 83.63ஆக நீடித்தது. கடந்த வாரம் முதல் பெட்ரோல் விலை மீண்டும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. சென்னையில் ரூ.84.52 என்ற விலையில் நேற்று விற்பனையானது. இன்று பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 12 காசுகள் அதிகரித்து ரூ.84.64 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் டீசல் விலை தொடர்ந்து 28வது நாளாக மாற்றமின்றி லிட்டர் ஒன்றுக்கு ரூ.78.86 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.

Recommended Video

    V-CONNECT | SAUDI ARABIA - ஒரு லிட்டர் பெட்ரோல் 17 ரூபாய் தான் | LOCKDOWN நிலவரம் | ONEINDIA TAMIL

    English summary
    Petrol prices across the four metros rose for the 5th straight day on Monday. The price of the transportation fuel in Chennai was at Rs 84.64 per litre, higher by 12 paise
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X