சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெட்ரோல் விலை இன்றும் உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.84.82க்கு விற்பனை

சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 9 காசுகள் அதிகரித்து ரூ.84.82 என்ற விலையில் இன்று விற்பனை செய்யப்படுகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு நேற்றைய விலையில் இருந்து 9 காசுகள் அதிகரித்து ரூ.84.82க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது. டீசல் ரூ.78.86 என்ற விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து விற்பனை செய்து வருகின்றன.

Petrol Prices Hiked 12 paisa today 1 liter Rs 84.82 in Chennai

கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தொடக்கத்தில் பெட்ரோல், டீசல் விலையில் பெரும் மாற்றமின்றி காணப்பட்டது. ஆனால் ஜூன், ஜூலை மாதங்களில் விலை படிப்படியாக உயர தொடங்கியது.

40 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் விலை 83.63ஆக நீடித்தது. கடந்த வாரம் முதல் பெட்ரோல் விலை மீண்டும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. சென்னையில் பெட்ரோல் லிட்டர் விலையில் மாற்றமின்றி ரூ.84.73க்கு நேற்று விற்பனையானது.

Gold rate: என்ன இது.. தங்கம் விலை இப்படி ஏறிகிட்டே போகுதே.. இனி கடையின் ஷோகேஸில்தான் பார்க்கணும் போலGold rate: என்ன இது.. தங்கம் விலை இப்படி ஏறிகிட்டே போகுதே.. இனி கடையின் ஷோகேஸில்தான் பார்க்கணும் போல

இந்தநிலையில் இன்று பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 9 காசுகள் அதிகரித்து ரூ.84.82க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது. டீசல் ரூ.78.86 என்ற விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இதே நிலையில் பெட்ரோல் விலை உயரும் பட்சத்தில் நாளைய தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் 85 ரூபாயை தொட்டு விடும் என்பதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

English summary
Petrol Prices Hiked 12 paisa today 1 liter Rs 84.82 in Chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X