சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெட்ரோல், டீசல் விலை 59 நாட்களுக்குப் பிறகு உயர்வு - சென்னையில் எவ்ளோ தெரியுமா

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 17 காசுகள் அதிகரித்து 84 ரூபாய் 31காசுகள் ஆகவும் டீசல் லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து 76 ரூபாய் 17 பைசாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை சிறிதளவு உயர்ந்துள்ளது. இன்று பெட்ரோல் லிட்டருக்கு 17 காசுகள் அதிகரித்து 84 ரூபாய் 31 பைசாவாகவும் டீசல் லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து ரூ.76 ரூபாய் 17பைசாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

Petrol Prices Hiked 17 paisa today 1 liter Rs 84.31 in Chennai

சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 84 ரூபாய்14 பைசாவாகவும் டீசல் லிட்டர் 75 ரூபாய் 95 பைசாவிற்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று பெட்ரோல் லிட்டருக்கு 17 காசுகள் அதிகரித்து 84 ரூபாய் 31 பைசாவாகவும் டீசல் லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து ரூ.76 ரூபாய் 17பைசாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

கொரோனா லாக்டவுன் காலத்தில் விலை உயர்த்தப்படாமல் இருந்த பெட்ரோல், டீசல் பின்னர் படிப்படியாக உயர்த்தப்பட்டது. பெட்ரோல் 85 ரூபாயை தொட்டுவிடும் நிலைக்கு வந்த போது நாடு முழுவதும் எதிர்கட்சியினர் விலை உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சில வாரங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது.

கொரோனா கிளஸ்டர்.. தெற்கு ஆஸ்திரேலியாவில் போட்டாச்சு முழு லாக் டவுன்.. மக்கள் வெளியே வரக் கூடாது கொரோனா கிளஸ்டர்.. தெற்கு ஆஸ்திரேலியாவில் போட்டாச்சு முழு லாக் டவுன்.. மக்கள் வெளியே வரக் கூடாது

பீகார் தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு பெட்ரோல் டீசல் விலை எந்த மாற்றமும் இன்றி இருந்தது. கடந்த 59 நாட்களுக்கும் மேலாக விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது பெட்ரோல் டீசல் விலை சிறிய அளவு உயர்த்தப்பட்டுள்ளது.

English summary
Petrol and diesel prices have gone up slightly in Chennai today. Today, petrol is being sold at Rs 84.31 per liter, up 17 paise, and diesel at Rs 76.17 per liter, up 22 paise.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X