சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெட்டிமுடியில் நிலச்சரிவின் போது ஒரே நாளில் 616 மி.மீ மழை.. 40 ஆண்டுகளில் இல்லாதது.. வெதர்மேன்

Google Oneindia Tamil News

சென்னை: மூணாறு நிலச்சரிவின் போது ராஜமலை பகுதியில் பெட்டிமுடியில் வரலாறு காணாத அளவுக்கு மிகவும் அதிகமாக 616 மி.மீ மழை ஒரே நாளில் கொட்டி தீர்த்தது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது வலைதள பக்கத்தில் கூறுகையில் கேரளாவில் இடுக்கி ஈரப்பதமான பகுதிகளில் ஒன்றாகும். இங்கு ஆண்டுக்கு 5000 மி.மீ.ருக்கு மேல் மழை பெய்யும். பீர்மேடு மற்றும் பொன்முடி ஆகிய பகுதிகளில் 4000 முதல் 5000 மி.மீ. மழை பெய்யும்.

ஆனால் இடுக்கி மாவட்டத்தில் கல்லார் எஸ்டேட், ராஜமலை, பெட்டிமுடி ஆகிய பகுதிகள் கூட பீர்மேட்டை விட அதிக அளவில் மழைப் பொழிவை பெற்றுள்ளது. ராஜமலையில் 2000 முதல் 2010-ஆம் ஆண்டு 9000 மி.மீ. மழை பொழிவை மூன்று முறை ஏற்பட்டுள்ளது. அது போல் பீர்மேடு 2013- 2015-ஆம் ஆண்டு வரை 8000 மி.மீ. மழையை இரு முறை தாண்டியுள்ளது.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இ-பாஸ் கிடையாது... தமிழகத்தில் இ-பாஸ் முறையை ரத்து செய்க -எல்.முருகன்இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இ-பாஸ் கிடையாது... தமிழகத்தில் இ-பாஸ் முறையை ரத்து செய்க -எல்.முருகன்

கர்நாடகா

கர்நாடகா

தென்னிந்தியாவில் இந்த பகுதிகள் ஈரப்பதமான பகுதிகளில் ஒன்றாக விளங்குகிறது. இவை கர்நாடகாவில் உள்ள ஆகும்பே, ஹூலிகல், தலைகாவேரி, அமாகான் ஆகிய ஜாம்பவான் பகுதிகளுக்கு கடும் போட்டியாகவே உள்ளது. பெட்டிமுடியில் 5500 மி.மீ. மழை பெய்து அந்த பகுதியை ஈரப்பதமான பகுதியாக வைத்திருக்கும்.

சாதனை

சாதனை

இடுக்கியில் உள்ள கல்லார் எஸ்டேட், கோழிக்கோட்டில் உள்ள காகயம் அணை, இடுக்கியில் உள்ள ராஜமலை, வயநாட்டில் உள்ள லக்கிடி, சைலன் பள்ளத்தாக்கில் உள்ள வலக்காடு ஆகிய குறைந்த அளவிலான பகுதிகள் மட்டுமே நிறைய மழையை பெறும். கேரளாவில் ஈரப்பதம் உள்ள பகுதிகளில் ஒன்றாக நீரியாமங்கலம் சாதனை புரியும் என எதிர்பார்த்த நிலையில் அது முடியவில்லை,

அதிக மழை

அதிக மழை

நான் இந்த மழைப் பொழிவை 15 ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறேன். 2015ஆம் ஆண்டு எல்னினோவால் வறட்சியை சந்தித்தபோது கூட பெட்டிமுடியில் 6500 மி.மீ மழை பதிவாகியது. 2018, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் ஆகஸ்ட் மாதம் பருவமழை தீவிரமடைந்ததால் இந்த பகுதிகளில் அதிக மழை பெய்து ஈரப்பதமாகவே உள்ளன.

அதிக மழைப்பொழிவு

அதிக மழைப்பொழிவு

குறைந்த நேரத்தில் அதிக மழை பொழிவை தரும் இடங்களில் பெட்டிமுடி முக்கிய இடமாகும். பெட்டிமுடியில் கடந்த 7ஆம் தேதி நிலச்சரிவு நடந்த போது மழையின் அளவை பார்த்தோமேயானால் 24 மணி நேரத்தில் அதாவது ஆகஸ்ட் 6- 7 தேதிகளில் 616 மி.மீ. அதீத மழைபெய்துள்ளது. இடுக்கி மாவட்டத்தில் 2018, 2019 இல் பெய்த மழையை காட்டிலும் பெட்டிமுடியில் பெய்தது அதீத மழையாகும்.

40 ஆண்டுகள்

40 ஆண்டுகள்

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளுக்கு 96 மணி நேரத்தில் 1600 மி.மீ. மழை என்பது அதிகபட்சமாகும். ஆனால் நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்னர் பெட்டிமுடியில் 616 மி.மீ மழை பெய்துள்ளது. 4ஆம் தேதி முதல் எத்தனை வலுவான மழை தொடங்கியது என்பதையே இது காட்டுகிறது. அந்த மழை 6ஆம் தேதி உச்சகட்டத்தை அடைந்து 7ஆம் தேதி முடியும் நிலையி்ல 616 மி.மீயானது. 24 மணி நேரத்தில் பெட்டிமலையில் பெய்த மழையின் அளவு 40 ஆண்டுகளில் மிகவும் அதிகமாகும்.

பேய் மழை

பேய் மழை

கேரளாவில் கடந்த காலங்களில் பெய்த பேய் மழையின் நிலவரம்: பெட்டிமுடியில் 96 மணி நேரத்தில் 1600 மி.மீ மிக அதிக கனமழை பெய்துள்ளது மிகவும் தீவிரமான விஷயமாகும். இடுக்கியில் தலையாறு பகுதியில் 1924 ஆம் ஆண்டு அதிக மழை பெய்தது. கேரளாவில் 1924-ஆம் ஆண்டுக்கு பிறகு இடுக்கியில் 4 நாட்கள் பெய்த மழையில் 2ஆவது மிகப் பெரிய மழை 96 மணி நேரத்தில் பெய்ததாகும் என வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

English summary
Tamilnadu Weatherman Pradeep John says that Pettimudi Tea Estate region gets massive rainfall with 616 mm on landslide day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X