சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

1988-ல் சட்டசபைக்குள் போலீசார் முதல் முறையாக உள்ளே நுழைய காரணமாக இருந்த பி.எச். பாண்டியன் தீர்ப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் ஜா அணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே எம்எல்ஏ பி.எச் பாண்டியன்

    சென்னை: தமிழக சட்டசபைக்குள் 1988-ல் முதல் முறையாக போலீசார் உள்ளே நுழையவும் காரணமாக இருந்தவர் மறைந்த சபாநாயகர் பி.எச்.பாண்டியன்.

    1987-ல் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். காலமானார். அவருக்குப் பின்னர் 1988-ம் ஆண்டு ஜனவரி 7-ல் அவரது மனைவி ஜானகி அம்மையார் முதல்வரானார்.

    PH Pandians Controversial verdict in TN Assembly

    1988 ஜனவரி 28-ல் சட்டசபையில் ஜானகி அம்மையார் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது. அவருக்கு 97 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தது. அன்றைய தினம் பெரும் களேபரங்களுக்கு இடையே சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.

    அப்போது ஜெயலலிதா ஆதரவு எம்.எல்.ஏக்கள், அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் என சபை அல்லோகலப்பட்டது. இந்த களேபரங்களுக்கு மத்தியில் ஜானகி அம்மையார் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக அறிவித்தார் பி.எச். பாண்டியன்.

    இந்திய வரலாற்றில் எம்.எல்.ஏக்களை கூண்டோடு தகுதி நீக்கம் செய்த முதல் சபாநாயகர் பி.எச். பாண்டியன்இந்திய வரலாற்றில் எம்.எல்.ஏக்களை கூண்டோடு தகுதி நீக்கம் செய்த முதல் சபாநாயகர் பி.எச். பாண்டியன்

    இதனை எதிர்த்து ஜெ. ஆதரவு எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சட்டசபைக்குள் முதல் முறையாக போலீசார் நுழைந்து எம்.எல்.ஏக்கள் மீது தடியடி நடத்தினர். தமிழக சட்டசபை வரலாறு காணாத வன்முறையை சந்தித்தது. இதனால் 1988-ல் ஜானகி அம்மையார் ஆட்சி கலைக்கப்பட்டது.

    English summary
    In 1988, then Speaker PH Pandian who announced that Chief Minister Janaki had won the trust vote, it was created to violence and Police entered to Assembly.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X