சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

Phethai: பேய்ட்டி புயல் இன்று வலுப்பெறும்.. தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை மையம்

தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிதாக உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    நாகை துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது- வீடியோ

    சென்னை: தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிதாக உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

    தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. கடந்த வாரம் உருவான இந்த தாழ்வு நிலை கொஞ்சம் கொஞ்சமாக வலுவடைந்தது.

    புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி பின் தாழ்வு மண்டலமாக மாறியது.

    இன்று புயல்

    இன்று புயல்

    காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு பகுதியாக மண்டலமாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதனால் தமிழகத்தில் கனமழை பெய்யும். இதனால் இந்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது. புயலாக மாறுவதற்கான அனைத்து சாத்தியங்களும் இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    பேய்ட்டி புயல்

    பேய்ட்டி புயல்

    இந்த புயல் இன்று மாலையோ இல்லை நாளை காலையோ தீவிர புயலாக வலு பெற வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கணித்து உள்ளது. இந்த புயலுக்கு பேய்ட்டி என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. பேய்ட்டி புயலுக்கான பெயரை தாய்லாந்து வைத்தது.

    எங்கு கனமழை

    எங்கு கனமழை

    இதனால் இன்றில் இருந்து மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது . முக்கியமாக சென்னையில் இதனால் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் இதனால் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

    கரையை கடக்கும்

    கரையை கடக்கும்

    பேய்ட்டி புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த புயல் சென்னையை நோக்கி வர வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது. சென்னைக்கும் விசாகபட்டினத்திற்கும் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

    English summary
    Phethai Strom may get stronger today. Phethai Strom may come towards Chennai as it gets strong says Chennai Weather Department.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X