சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எது உண்மையான தேர்தல் அறிக்கை?? பாஜகவை கலங்கடித்த போட்டோஷாப்.. அதிர வைத்த நெட்டிசன்கள்!

பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள் போலவே உருவாக்கப்பட்டு இருக்கும் பொய்யான வாக்குறுதி புகைப்படங்கள் இணையத்தில் பெரிய வைரலாகி ஹிட் அடித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    BJP Manifesto 2019: பல அறிவிப்புகளுடன் வெளியான பாஜகவின் தேர்தல் அறிக்கை - வீடியோ

    சென்னை: பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள் போலவே உருவாக்கப்பட்டு இருக்கும் பொய்யான வாக்குறுதி புகைப்படங்கள் இணையத்தில் பெரிய வைரலாகி ஹிட் அடித்துள்ளது.

    லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக கட்சி நேற்று டெல்லியில் வெளியிட்டது. சங்கல்ப் பத்ரா என்று இந்த தேர்தல் அறிக்கைக்கு பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது.

    அறிக்கைக்கு எதிராக இணையத்தில் இன்னொரு பாஜகவின் தேர்தல் அறிக்கையும் வைரல் ஆனது. ஆனால் இது பொய்யான தேர்தல் அறிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒரு கையால் ரயிலையே தூக்கியவராச்சே.. போட்டோ எடுத்த தொண்டர்.. விரட்டி விரட்டி வெளுத்த பாலகிருஷ்ணா ஒரு கையால் ரயிலையே தூக்கியவராச்சே.. போட்டோ எடுத்த தொண்டர்.. விரட்டி விரட்டி வெளுத்த பாலகிருஷ்ணா

    போட்டோஷாப் அறிக்கை

    போட்டோஷாப் அறிக்கை

    ஒரு காலத்தில் பாஜக நிறைய போட்டோஷாப் செய்த புகைப்படங்களை வெளியிட்டு தவறான செய்திகளை பரப்புகிறது என்று குற்றச்சாட்டு இருந்தது. தற்போது அதே போட்டோஷாப் பாஜகவிற்கு எதிராக திரும்பி இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். பாஜகவின் தேர்தல் அறிக்கை போலவே பொய்யான போட்டோஷாப் செய்யப்பட்ட தேர்தல் அறிக்கை இணையத்தில் வெளியானது.

    பெரிய வைரல்

    பெரிய வைரல்

    இந்த போட்டோஷாப் அறிக்கைகள் எல்லாம் இணையத்தில் பெரிய ஹிட் அடித்தது. பலர் இதை தொடர்ந்து ஷேர் செய்து காமெடி செய்து வந்தனர். சிலர் இன்னும் ஒருபடி மேலே போய் எது உண்மை, எது பொய்ன்னு தெரியலையே என்று கூறி வருகிறார்கள். பின்வரும் பொய்யான வாக்குறுதி போட்டோக்களை நீங்களே பாருங்க மக்களே!

    போட்டோஷாப் பயிற்சி

    நாட்டின் வளர்ச்சியை எடுத்துக்கூற அனைவர்க்கும் இலவச போட்டோஷாப் பயிற்சி அளிக்கப்படும்.

    கோமியம் ராக்ஸ்

    ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவசமாக 7 லிட்டர் கோமியம் எல்லா மாதமும் வழங்கப்படும்.

    இந்திய சுவர்

    சீனாவின் பெருமையை குறைக்கும் வகையில், சீனாவை போலவே இந்தியாவை சுற்றிலும் இந்திய பெருஞ்சுவர் கட்டப்படும்.

    நாட்டின் பொருளாதாரம்

    நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றும் வகையில், அனைவருக்கும் குறைந்தபட்ச வங்கி வைப்புத் தொகை ரூபாய் 10000 ஆக வைக்கப்படும்.

    அட கருமமே

    96 பட ராமை ஜானுவுடன் சேர்த்து வைக்க சட்டம் இயற்றப்படும்.

    ஒருநாள் நேரம்

    பிரதமர் மோடிக்கு ஒரு நாளுக்கு உழைக்க நேரம் குறைவாக இருப்பதால் ஒருநாள் நேரம் 24க்கு பதில் 28 மணி நேரமாக மாற்றப்படும்.

    அட பசங்களா!

    மங்கி பாத் மூலம் எல்லா வருடமும் குரங்கு குளிர்விப்பு முகாம் பரங்கிமலையில் நடத்தப்படும் (அது ஏன் பாஸ் பரங்கிமலை ??). இதற்கு 1358 கோடி ரூபாய் செலவு செய்யப்படும்.

    English summary
    Photoshopped Fake BJP manifesto becomes viral in Twitter and many other Social media.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X