சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வருகிறது பேய்ட்டி புயல்.. ஆனால் தமிழகத்துக்கு ஆபத்து இருக்காது

Google Oneindia Tamil News

Recommended Video

    உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை...சென்னைக்கு மழை வருமா ?

    சென்னை: தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் புதிதாக உருவாகவுள்ள புயலுக்கு பேய்ட்டி என பெயரிடப்பட உள்ளது. இந்த புயலால் தமிழகத்துக்கு எந்தபாதிப்பும் இல்லை என்றாலும் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

    தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது தீவிரமடைந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகும்.

    அதன் பினனர் புயலாகவும் மாறி தமிழகம்- ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். புயல் முதலில் சென்னை நோக்கி நகரும் என்றும், சென்னையை தாக்கும் அபாயம் இருப்பதாகவும் கணிக்கப்பட்டது.

    நகரத் தொடங்கும்

    நகரத் தொடங்கும்

    ஆனால் இப்போது காற்று வீசும் திசையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக ஆந்திரா நோக்கி நகரும் என்று கூறப்படுகிறது. 12-ஆம் தேதி புயலாக மாறி கடற்கரை நோக்கி நகரத் தொடங்கும்.

    பலத்த மழைக்கு வாய்ப்பு

    பலத்த மழைக்கு வாய்ப்பு

    14-ஆம் தேதி கரையை நெருங்கும். 15-ஆம் தேதி கடற்கரையை அடையும், 16-ஆம் தேதி கரையை கடக்காமல் வலுவிழந்து ஒடிசாவுக்கு சென்றுவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திங்கள்கிழமைக்கு மேல் வட தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வறண்ட வானிலை

    வறண்ட வானிலை

    காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறும்பட்சத்தில் அதற்கு நாடுகள் வரிசைப்படி தாய்லாந்து ‘பேய்ட்டி' என பெயர் சூட்டும். கஜா புயலுக்கு இலங்கை பெயர் சூட்டியது. இந்த புயல் டெல்டா மாவட்டங்களை தாக்கிய பின்பு அவ்வப்போது மிதமான மழை பெய்து வந்தது. கடந்த 3 நாட்களாக தமிழகத்தில் வறண்ட வானிலையே காணப்படுகிறது.

    வானிலையே நீடிக்கும்

    வானிலையே நீடிக்கும்

    அடுத்த 24 மணி நேரத்துக்கு தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வட மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    English summary
    Piety cyclone will form in Bay of Bengal. It will go near Andhra and after that it goes to Orissa.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X