சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏலேலோ ஐலசா, விமானம் பாரு ஐலசா.. லாரியில் போகுது ஐலசா - காயலான் கடைக்குப் போகுது ஐலசா!

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை வெள்ளத்தில் சேதமடைந்த விமானம் லாரியில் போகிறது- வீடியோ

    சென்னை: வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் என்பது பழமொழி. அதன்படி சென்னையில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான (ஜெட் ஏர்வேஸ்) விமானம் கடந்த 2015 சென்னை வெள்ளத்தில் சேதமடைந்து தற்போது லாரியில் ஏற்றப்பட்டு விசாகப்பட்டினத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    கல்ப்ஸ்ட்ரீம் ஜி 200 ரக விமானம் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் சென்னை விமான நிலையத்திலிருந்து இயக்கப்படுகிறது. மொத்தம் 7 பேர் அமர்ந்து செல்லும் சிறிய ரக விமான இதுவாகும்.

    சென்னையில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெள்ளம் வந்தது. அப்போது விமான நிலையத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. ஓடுதளத்திலும் தண்ணீர் புகுந்ததால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 8 விமானங்கள் சேதமடைந்தன.

    விற்பனை

    விற்பனை

    அவற்றில் ஒன்றுதான் கல்ப்ஸ்ட்ரீம் விமானம் ஆகும். இந்த விமானத்தின் இயக்கம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்டது. இதையடுத்து அந்த விமானத்தின் உதிரிபாகங்களை சென்னையில் உள்ள உரிமையாளர் விற்றுவிட்டார்.

    விசாகப்பட்டினம்

    விசாகப்பட்டினம்

    அதை விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த தொழிலதிபர் வாங்கிவிட்டார். இதன் காரணமாக அந்த விமானம் பெரிய கண்டெய்னர் மூலம் சாலை வழியாக விசாகப்பட்டினத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    மக்கள் மறக்கவில்லை

    மக்கள் மறக்கவில்லை

    விமானத்தின் இறக்கைகள் நீக்கப்பட்டு அதன் உடல் மட்டும் விசாகப்பட்டினத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதை அவ்வழியே போவோர், வருவோர் ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டு செல்கின்றனர். கன்டெய்னர் லாரிகள் இரவுக்கு மேல்தான் செல்ல வேண்டும் என்பதால் விமானத்துடன் லாரி பல்லாவரத்தில் உள்ள ஜிஎஸ்டி சாலையில் நிற்கவைக்கப்பட்டுள்ளது.

    புரிதல்

    புரிதல்

    எத்தனை கம்பீரமாக நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் தற்போது தரை வழி போக்குவரத்தின் மீது பயணம் செய்வதை பார்க்கும் போது வாழ்க்கை என்பது என்ன, வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் என்பதை புரிந்து கொள்ள வைக்கிறது. இது புரியாமல் ஏழை, பணக்காரன் வித்தியாசம், ஜாதிய பாகுபாடுகள் அப்பப்பா!

    English summary
    A Jetairways plane which was damaged in Chennai 2015 flood taken to Vizag after it was declared as scrap.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X