சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீதிபதிகள் மீது விமர்சனம்: 'துக்ளக்' குருமூர்த்தி நடவடிக்கை எடுக்க கோரி ஹைகோர்ட்டில் மனு

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: அரசியல்வாதிகள் காலில் நீதிபதிகள் விழுவதாக துக்ளக் குருமூர்த்தி பேசியது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யபட்டது. இதனை மனுவாக தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ள்னர்.

துக்ளக் பத்திரிகையின் 51வது ஆண்டு விழா சென்னையில் கடந்த 14-ந் தேதி நடைபெற்றது. இதில் பேசிய துக்ளக் பத்திரிக்கையின் தற்போதைய ஆசிரியர் குருமூர்த்தி, உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் அரசியல்வாதிகளால் நியமிக்கபட்டவர்கள். யார் மூலமாவது யார் காலையோ பிடித்து தான் நீதிபதிகளாக வந்துள்ளனர்.

Plea in Madras HC seeks take action against Thuglak gurumurthy for defaming judges

இது வருத்தபட வேண்டிய விடயம், ஊழல் செய்பவ்ர்க்ளை நீதிமன்றங்கள் தண்டிப்பது இல்லை, ஆகவே தகுதியின் அடிப்படையில் நீதிபதிகள் வந்தால் இதுபோன்று நடைபெறாது என பேசியிருந்தர்.

இந்த நிலையில் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஆதிகேசவலு பெஞ்ச் முன்பாக, வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் துக்ளக் பத்திரிக்கையின் 51வது ஆண்டு விழாவில் நீதித்துறையையும் நீதிபதிகளையும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய குருமூர்த்தி மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென முறையீடு செய்தார்

இந்த முறையீட்டை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இதை ஒரு மனுவாக தாக்கல் செய்யுமாறு அறிவுறித்தியுள்ளனர். இது மனுவாக தாக்கள் செய்தால் இந்த வழக்கு விரைவில் விசாரனைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது.

English summary
A Plea in Madras HC seeks take action against Thuglak gurumurthy for defaming judges.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X